காட்மியம் ஐதராக்சைடு

From Wikipedia, the free encyclopedia

காட்மியம் ஐதராக்சைடு
Remove ads

காட்மியம் ஐதராக்சைடு (Cadmium hydroxide) என்பது Cd(OH)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும்.. வெண்மைநிற படிகங்களான இந்த அயனிச்சேர்மம் நிக்கல்-காட்மியம் மின்கலன்களில் உபயோகமாகும் ஒரு முக்கியமானச் சேர்மமாகும்[2]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு மற்றும் வினைகள்

காட்மியம் நைட்ரேட்டுடன் சோடியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் வழியாக காட்மியம் ஐதராக்சைடைத் தயாரிக்கலாம்.

Cd(NO3)2 + 2 NaOH → Cd(OH)2 + 2 NaNO3

மற்ற காட்மியம் சேர்மங்களில் இருந்து காட்மியம் ஐதராக்சைடு தயாரிக்க முயல்வது பல சிக்கல்கள் நிறைந்த வழிமுறையாகும்[2]. துத்தநாக ஐதராக்சைடை விட இது அதிகமான காரத்தன்மையுடன் காணப்படுகிறது. அடர்த்தியான எரிசோடாவுடன் சேர்ந்து Cd(OH)42− என்ற எதிர்மின் அணைவு அயனியாக உருவாகிறது. சயனைடுகள், தையோசயனேட்டுகள் மற்றும் அமோனிய அயனிகளுடன் இவ்வயனிக் கரைசலைச் சேர்க்கும்போது அணைவுச் சேர்மங்களைத் தருகிறது. காட்மியம் ஐதராக்சைடைச் சூடுபடுத்தும்பொழுது இது தண்ணீரை இழந்து காட்மியம் ஆக்சைடை உற்பத்தி செய்கிறது. 130 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையத் தொடங்கும் செயல்முறை 300 பாகை செல்சியசு வெப்பநிலை வரை தொடர்ந்து பின்னர் நிறைவடைகிறது. ஐதரோ குளோரிக் அமிலம், கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் போன்ற கனிம அமிலங்களுடன் வினைபுரிந்து இதனுடன் தொடர்புடைய காட்மியம் குளோரைடு, காட்மியம் சல்பேட்டு மற்றும் காட்மியம் நைட்ரேட்டு முதலான காட்மியம்|காட்மிய]] உப்புகளைத் தருகிறது.

Remove ads

பயன்கள்

தேக்க மின்கல அடுக்குகளின் எதிர்மின் முனையில் இது தோற்றுவிக்கப்படுகிறது. நிக்கல்-காட்மியம் மற்றும் வெள்ளி-காட்மியம் தேக்க மின்கல அடுக்குகளில் இது விடுவிக்கப்படுகிறது.

2NiO(OH) + 2H2O + Cd → Cd(OH)2 + Ni(OH)2

காட்மியம் ஆக்சைடுக்கு மாற்றாக பலவகையான வேதிச்செயல்களுக்கு இந்த ஐதராக்சைடு சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads