காப்பு (சமூகம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காப்பு (Kapu) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும்.[1]
காப்பு மக்கள் கடந்த காலங்களில் ஆந்திராவை ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசு போன்ற இந்து சாம்ராஜ்யங்களில் இராணுவ தளபதிகளாகவும் (நாயக்கர்கள்) மற்றும் போர்வீரர்களாகவும் பணியாற்றினர்.
காப்பு மக்கள் ஆந்திராவில் ஆதிக்க சாதியினராக அறியப்படுகின்றனர், மேலும் இவர்கள் பெருநிலவுடமையாளர் சமூகமாகவும் உள்ளனர்.[2]
Remove ads
சொற்பிறப்பு
காப்பு என்பதற்கு காவல் என்று பொருள். இம்மக்கள் அரசர்களாக இருந்ததால், இவர்களை காப்பு என்று அழைப்பர். காப்பு என்றால் காவல் காப்பவர் அல்லது பாதுகாவலர் என்று பொருள்.
காப்பு என்ற சொல்லுக்கு தெலுங்கு மொழியில் விவசாயி அல்லது 'விவசாயம் செய்தல்' என்று பொருள்.
காப்பு என்பது வேறு சில சமூகங்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு தலைப்பாகும்[3].
தோற்றம்
காப்பு மக்களின் தோற்றம் குறித்து பல வரலாற்று ஆசிரியர்கள் பல வரலாற்று புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள், அதன் மூலம் அவர்கள் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் பண்டைய பாரததேசத்தை ஆட்சி செய்த ராஜவம்சங்களான சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம், நாகவம்சம் போன்ற சத்திரிய வம்சங்களின் வழித்தோன்றல்களாக அறியப்படுகிறார்கள்.[4]
பூர்வீகம்
காப்புகள் கங்கை சமவெளியில் இருந்து, அனேகமாக அயோத்திக்கு அருகில் உள்ள கம்பில்யாவிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஆந்திரபிரதேச மாநிலத்திற்கு இடம்பெயர்ந்ததாக நம்பப்படுகிறது.
வரலாறு
ஆந்திர மாநில வரலாற்றின் படி காப்பு சமூகம் ஒரு பழமையான சமுகமாகும். மேலும் இவர்கள் போர்குடி சமூகமாகவும் இருந்துள்ளார்கள்.[5]
தொழில்
இச்சமூகத்தினர் போர் தொழிலையே பிரதான தொழிலாக கொண்டிருந்தனர், தற்போது இம்மக்கள் வேளாண்மை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.[6][7]
உட்பிரிவுகள்
இந்த இனத்தவர்கள் காப்பு இனத்தின் உட்பிரிவினராக உள்ளனர்.[8][9][10]
வாழும் பகுதிகள்
கடற்கரை ஆந்திராவில் அதிக அளவில் வசிக்கின்றனர். மேலும் தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் வசிக்கின்றனர்.
சமுதாய நிலை
ஆந்திரா அரசு மற்றும் மத்திய அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் முன்னேறிய வகுப்பினராக உள்ளனர்.[11]மேலும் உட்பிரிவுகளில் சில பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளனர்.[12]
அரச வம்சங்கள்
- மதுரை நாயக்கர்கள்
- தஞ்சை நாயக்கர்கள்
- செஞ்சி நாயக்கர்கள்
- பேளூர் நாயக்கர்கள்
- பெனுகொண்டா நாயக்கர்கள்
- கண்டி நாயக்கர்கள்
- கேளடி நாயக்கர்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads