செஞ்சி நாயக்கர்கள்

From Wikipedia, the free encyclopedia

செஞ்சி நாயக்கர்கள்
Remove ads

செஞ்சி நாயக்கர்கள் (Nayaks of Gingee) தமிழ்நாட்டின் செஞ்சி நகரத்தை தலைநகராகக் கொண்டு கி பி 1508 முதல் 1649 முடிய ஆட்சி செய்த தெலுங்கு மரபினர் ஆவர்.[1] முன்னர் விஜய நகரப் பேரரசின் செஞ்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை போன்ற பகுதிகளின் ஆளுநர்களாக விளங்கினர். துவக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் கொள்ளிடம் ஆறுவரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் ஆட்சியில் இருந்தது.[2] பின்னர் விஜய நகர பேர்ரசின் ஆரவீடு மரபினர் வேலூரை தலைமை இடமாக கொண்டு ஆளத் தொடங்கியதும். செஞ்சி நாயக்கரின் ஆட்சி எல்லையானது வாட்டகே பாலாறு, தெற்கே கொள்ளிடம் ஆறு இவற்றுக்கு இடைபட்ட பகுதியில் சுருங்கியது.[3] விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சை நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி புரிந்ததைப் போன்று செஞ்சி நாயக்கர் கிருஷ்ணப்ப நாயக்கர் 1509 முதல் தன்னாட்சியுடன் ஆட்சி செய்து வந்தார்.[4] பின்னர் இவரது வழித்தோன்றல்கள் செஞ்சியை கி பி 1649-இல் செஞ்சியை பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றும் வரை ஆண்டனர்.[5]

விரைவான உண்மைகள் செஞ்சி நாயக்கர்கள், தலைநகரம் ...
Remove ads

செஞ்சி நாயக்கர் தோற்றம்

செஞ்சி நாயக்க அரசை நிறுவியவர் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆவார்.[6] இவர் கி.பி 1509 தொடக்கம் 1521 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் படைதளபதியான வையப்ப நாயக்கரின் மகனாவார்.[7]

செஞ்சி ஆட்சி செய்த சூரப்ப நாயக்கரின் சகோதரான கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் கருநாடக மாநிலத்தில் பேளூர் நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.[8] இவரின் வம்சாவளிகள் விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் பேளூர் நாயக்கர்கள் என்ற பெயரில் தற்கால ஹாசன், குடகு பகுதிகளை சுதந்தரமாக ஆண்டனர்.[9]

Remove ads

செஞ்சி நாயக்கர்களின் மரபு

திருக்கோயிலூர் வீரப்பாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் கல்வெட்டின் படி (கி.பி. 1568) செஞ்சி நாயக்க வம்சத்தை நிறுவிய கிருஷ்ணப்ப நாயக்கர், கவரை சமூகத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[10] மெக்கன்சி கைபீது ஆவணத்தில் செஞ்சி மன்னரான வெங்கடபதி நாயக்கர், கவரை சமூகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.[11]

செஞ்சி நாயக்கர்களின் பட்டியல்

  1. கிருஷ்ணப்ப நாயக்கர் (1509–1521)[12]
  2. சென்னப்ப நாயக்கர்
  3. கங்கம நாயக்கர்
  4. வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கர்
  5. வேங்கடராமா பூபால நாயக்கர்
  6. திரியம்பக கிருஷ்ணப்ப நாயக்கர்
  7. வரதப்ப நாயக்கர்
  8. இராமலிங்க நாயனி வாரு
  9. வேங்கட பெருமாள் நாயுடு
  10. பெரிய ராமபத்திர நாயுடு
  11. இராமகிருஷ்ணப்ப நாயுடு (- 1649)

வரலாற்றாய்வாளர் சி. எஸ். சீனிவாசாச்சாரி கூற்றுப்படி[13]

  1. வையப்ப நாயக்கர்
  2. கிருஷ்ணப்ப நாயக்கர்
  3. அச்சுத விஜய ராமச்சந்திர நாயக்கர்
  4. முத்தியாலு நாயக்கர்
  5. வெங்கடப்ப நாயக்கர்
  6. வரதப்ப நாயக்கர்
  7. அப்பா நாயக்கர்

ஆட்சிப் பகுதிகள்

வட தமிழ்நாட்டின் தற்போதைய செஞ்சி வேலூர், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி, நெல்லூர், சித்தூர், சந்திரகிரி ஆகிய பகுதிகள் செஞ்சி நாயங்காரக்களின் ஆளுகையில் இருந்தது.[14] 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலூர்க் கோட்டையை இழந்தனர்.

வழித்தோன்றல்

செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னரான துபாகி கிருஷ்ணப்ப நாயக்கரின் வழித்தோன்றலான சங்கரைய நாயுடு, சென்னப்ப நாயக்கன் பாளையத்தின் ஜமீன்தாராகவும், சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[15]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads