காற்றுக்கென்ன வேலி (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜா பார்வை என்பது 18 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப காதல் நாடகத் தொடர் ஆகும்.[1][2] இது 'மொஹார்' என்ற வங்காள மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[3][4]
இந்த தொடர் 'தஞ்சை ஆர்.கே' என்பவர் இயக்கத்தில் 'பிரியங்கா குமார்' மற்றும் 'சுவாமிநாதன் ஆனந்தராமன்' ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க 'அபிஷேக் ரெகே' என்பவர் எண்டெமால் ஷைன் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 30 செப்டம்பர் 2023 அன்று ஒளிபரப்பப்பட்டது மற்றும் 809 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[5][6][7]
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- பிரியங்கா குமார்[8] - வெண்ணிலா
- தர்ஷன் கே. ராஜு (2021) → சுவாமிநாதன் ஆனந்தராமன் (2021-2023) - சூர்யா மகாதேவன்
- மாளவிகா அவினாஷ் (2021) → ஜோதி ராய் (2021-2023) → ஹர்ஷா நாயர் (2023) - சாரதா மகாதேவன்
- பானு பிரகாஷ் - மகாதேவன்
துணைக் கதாபாத்திரங்கள்
- ஜனனி அசோக் - மது
- ஸ்ரீதேவி அசோக்[9] - சியாமளா
- மானஷ் சாவளி - மாதவன்
- மதன் - விஷ்ணு
- ஆட்சிதா அசோக் - அபி
- ரேஸ்மா - சௌமியா
- பிரீத்தா ரெட்டி - ஆனந்தி
- ஹேமா ராகேஷ் - இந்துமதி
- ஆர்த்தி ராம்குமார் - பானுமதி
- தருண் மாஸ்டர் - சிவநாதம்
- வீனா வெங்கடேஷ் - மீனாட்சி
- சிவகுமார்
- பத்மினி - வாசுகி
- நளினிகாந்த் - வரதராஜன்
- சியாம் சுந்தர்
- சாமி - மரகதம்
Remove ads
நேர அட்டவணை
இந்த தொடர் 18 சனவரி 2021 முதல் 13 மார்ச்சு 2021 வரை திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 15 மார்ச்சு 2021 முதல் நேரம் மாற்றப்பட்டு திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கும் பின்னர் 12 ஜூலை 2021 முதல் மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பானது.
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஹாட் ஸ்டார் என்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads