காளவாசல்

மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

காளவாசல் (Kalavasal) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில்,[1][2] 9°55'49.1"N, 78°05'43.8"E (அதாவது, 9.930300°N, 78.095500°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 162 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

விரைவான உண்மைகள் காளவாசல்Kalavasal காளவாசல், நாடு ...

மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், தத்தனேரி, கோச்சடை, எஸ். எஸ். காலனி, அரசரடி மற்றும் பழங்காநத்தம் ஆகியவை காளவாசல் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். நாற்பது வருடங்களுக்கு முன்பே, இரவு முழுவதும் பல கடைகள் திறக்கப்பட்டு, வெளியூரிலிருந்து மதுரை வருபவர்கள் பொருட்களை வாங்கும் பொருட்டு, எப்போதும் மதுரையில் பரபரப்புடன் காணப்படும் பகுதிகளில் காளவாசல் பகுதியும் ஒன்று.[3] ரூ.54.07 கோடியில் நான்கு வழி மேம்பாலம் ஒன்று காளவாசல் சந்திப்பில் அமைக்கப் பெற்று, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டில் பெரும்பங்கு வகிக்கிறது.[4] இந்த மேம்பாலம் 0.75 கி.மீ. நீளம் கொண்டது. மதுரையிலிருந்து தேனி செல்லும் பாதையில், மதுரை - திண்டுக்கல் புறவழிச்சாலை சந்திக்கும் இடத்தில் இந்த காளவாசல் சந்திப்பு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.[5] இதனால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு மக்கள் பலனடைகின்றனர். காளவாசல் பகுதியிலிருந்து மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே அமைந்திருக்கிறது. இங்கிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்தில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் மற்றும் சுமார் 10 கி.மீ. தொலைவில் மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகியவை உள்ளன. மேலும், எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. காளவாசல் பகுதியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில் மதுரை வானூர்தி நிலையம் சிறப்புற அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads