மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பேருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். ஜி. ஆர். பேருந்து நிலையம் (M.G.R. Bus Stand) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை நகரப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய பேருந்து நிலையமாகும். இந்த பேருந்து நிலையம் பொதுவாக மாட்டுத்தாவணி என மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.
Remove ads
வரலாறு
மதுரை நகரில் பெருகிய போக்குவரத்து நெரிசலின் காரணமாக, மதுரை நகருக்குள் இருந்த மூன்று பேருந்து முனையங்களுக்கு மாற்றாக ஒரு ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அமைக்க மதுரை மாநகராட்சி முடிவு செய்து மாட்டுத்தாவணி அமைக்கப்பட்டது. பின் சுற்றுச்சாலைத் திட்டம் மூலம் அனைத்து முனையங்களும் மாட்டுத்தாவணியுடன் இணைக்கப்பட்டன. இப்பேருந்து நிலையம் 10 கோடி செலவில், சுமார் 10 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Remove ads
பெயர்க் காரணம்
இந்தப் பேருந்து நிலையம் மாடுகள் விற்பனை செய்யப்படும் பகுதியாக இருந்த மாட்டுத் தாவணி என்கிற பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதால், மதுரையில் இருப்பவர்களும், அடிக்கடி மதுரை வந்து செல்பவர்களும் இந்தப் பேருந்து நிலையத்தை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்கிற பெயராலேயே அழைக்கின்றனர். மதுரையில் பேச்சு வழக்கத்தில் உள்ள இந்தப் பெயரே அனைவராலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சேவைகள்

மதுரையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளதால், இப்பேருந்து நிலையம் எட்டு நடைமேடைகளுடன், நடைமேடைக்கு பன்னிரண்டு தடங்களில் அதிக அளவு பேருந்துகளைக் கையாளக்கூடியதாக உள்ளது.[2] இப்பேருந்து நிலையத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் கருநாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன.[3][4][5]
அதிக போக்குவரத்து நெரிசலின் காரணமாக தனியார் ஓம்னி பேருந்து முனையம் புதிதாக அமைக்கபட்டுள்ளது.[6][7]
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் : ( சென்னை, திருச்சி, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், வடலூர், விருத்தசாலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, நீடாமங்கலம், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, திருமயம், சிங்கம்புணரி, பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, தொண்டி, சிவகங்கை, காளையார்கோவில், இடையாங்குடி, நத்தம், மணப்பாறை, விராலிமலை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி, எட்டையபுரம்,விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, கீழக்கரை, சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பாபநாசம் என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம், புனலூர், கொட்டாரக்கரை, மூணார், கோட்டயம், எர்னாகுளம், பாலக்காடு, திருச்சூர், குருவாயூர், மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர் போன்ற நகரங்களுக்கும், பெங்களூரு, மைசூர், மடிக்கேரி, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.)
Remove ads
பயணியர் வசதிகள்
- பயணச் சீட்டு வழங்குமிடங்கள் (SETC, TNSTC, KSRTC)
- உணவகம் மற்றும சிற்றுண்டிக் கடைகள்
- இருக்கை வசதி.[8]
- தானியங்கி பணம் வழங்கும் கருவி (ATM).[9]
- கழிப்பறை மற்றும் ஓய்வறை (இலவசம் மற்றும் கட்டணம்)
- வண்டிகள் நிறுத்துமிடம்.[10]
- வாடகை வண்டிகள்.[11][7]
- காவல்துறை வெளிச் சாவடி. (Police out post)[12]
- உரிமம் பெற்ற பூ வணிகர்கள்.[13]
- மருத்துவ உதவிக் குழு.[14]
படக்காட்சியகம்
மேற்கோள்கள்
இவற்றையும் காணவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads