கிரிசு ரொக்

அமெரிக்க நடிகர் From Wikipedia, the free encyclopedia

கிரிசு ரொக்
Remove ads

கிரித்தபர் யூலியசு கிரிசு ரொக் III ஒரு அமெரிக்க நகைச்சுவையாளர், நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர். இவரது மேடைச்சிருப்புரைக்காக பெரிதும் அறியப்படுகிறார். அரசியல், வர்க்கம், இனம், உறவுகள் ஆகியவற்றை இவரது கருப்பொருட்களாக பெரிதும் பயன்படுத்துகிறார்.

விரைவான உண்மைகள் Chris Rockகிரிஸ் ராக், இயற்பெயர் ...

காமெடி சென்ட்ரல் தொலைக்காட்சி நிறுவனமால் வரலாற்றில் ஐந்தாம் மிகச்சிறந்த மேடைச் சிரிப்புரையாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிஸ் ராக் தென் கரொலைனாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளந்தார்.

1985இல் மேடைச் சிரிப்புரையில் ஆரம்பித்து எடி மர்ஃபி இவரை கண்டு அவரின் திரைப்படம் பெவர்லி ஹில்ஸ் காப் 2-இல் ஒரு பாத்திரத்தை கிரிஸ் ராக்குக்கு கொடுத்தார். 1990இல் பிரபலமான அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி சாட்டர்டே நைட் லைவில் சேர்ந்து 1993 வரை இந்த நிகழ்ச்சியில் நடித்துள்ளார்.

1996இல் ப்ரிங் த பெய்ன் என்ற நகைச்சுவைக் காட்சியை படைத்து இரண்டு எமி விருதை வென்று அமெரிக்காவில் மிக புகழ்பெற்ற மேடைச் சிரிப்புரையாளர்களில் ஒன்றானார். இதற்கு பிறகு திரைப்படங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்த ஆரம்பித்தார். டாக்மா, த லாங்கெஸ்ட் யார்ட், பாட் கம்பெனி, ஹெட் அஃப் ஸ்டேட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2005இல் சிறுவர் கிரிஸ் ராக்கை பற்றி எவ்ரிபடி ஹேட்ஸ் கிரிஸ் என்ற நகைச்சுவை தொடர் தொடங்கியுள்ளது. இத்தொடரில் கிரிஸ் ராக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். பல கண்டிப்பவர்கள் இத்தொடருக்கு நன்றாக விமர்சனங்கள் செய்துள்ளனர்.

பொதுவாக கிரிஸ் ராக்கின் நகைச்சுவைக் காட்சிகளில் அமெரிக்க அரசியல், ஆபிரிக்க அமெரிக்கப் பண்பாடு, பாலியல், இனப் பாகுபாடு போன்ற கருப்பொருள்களைப் பற்றி பேசுவார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads