கிருஷ்ணமூர்த்தி (நடிகர்)

தமிழ் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

கிருஷ்ணமூர்த்தி (நடிகர்)
Remove ads

கிருஷ்ணமூர்த்தி (1963/1964 - 7 அக்டோபர் 2019) என்பவர் இந்திய தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார்.[2]

விரைவான உண்மைகள் கிருஷ்ணமூர்த்தி, பிறப்பு ...

தொழில்

கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த ஊரான திருவண்ணாமலையிலிருந்து திரைப்படங்களில் நடிக்கும் நோக்குடன் 1983இல் சென்னை வந்தார். ஆரம்பத்தில் நடிப்பு முயற்சிகளில் தோல்வியுற்றார். பின்னர் இவர் குழந்தை ஏசு (1984) படக் குழுவில் அலுவலக உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். படத் தயாரிப்பின் முடிவில், தயாரிப்பு மேலாளராக உயர்ந்தார். பின்னர் இவர் பல திரைப்படங்கள், விளம்பரங்களில் தயாரிப்புக் குழு உறுப்பினராக பணியாற்றினார். இதன் விளைவாக, ஆரம்பத்தில் மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி என்று படங்களில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டது.[3][4]

தவசி (2001) திரைப்படத்தில் கிருஷ்ணமூர்த்தி நகைச்சுவை நடிகராக முன்னேற்றம் கண்டார், அதில் இவரது கதாபாத்திரம் ஒரு காட்சியில் தோன்றி வடிவேலுவின் கதாபாத்திரத்திடம் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை சந்திக்க அவரது முகவரியைக் காட்டி வழிகேட்பதாக வரும்.[5][6][7] அதன் பின்னர் இவர் 2000 களில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் பணியாற்றினார், பெரும்பாலும் வடிவேலுவுடனான காட்சிகளில் தோன்றினார்.[8]

பாலாவின் நான் கடவுள் (2009) படத்தில் மனித கடத்தல் குழுவில் நடுத்தர மேலாளரான முருகன் பாத்திரத்தில் நடித்ததற்காகவும், மொனகுருவில் (2011) ஊழல் நிறைந்த காவலராக நடித்தற்காக இவர் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[5] யானை மேல் குதிரை சவாரி திரைப்படத்தில் இவரது பாத்திரம் குறித்து ஒரு விமர்சகர் குறிப்பிடுகையில், "கிருஷ்ணமூர்த்தி நடித்த ஐஸ்கிரீம் விற்பனையாளர் பாத்திரமானது, அவரது நடிப்பு வாழ்க்கையின் மிகச்சிறந்த பாத்திரமாகும்" என்றார்.[9]

Remove ads

இறப்பு

கேரளத்தின் குமிளியில் மாரடைப்பால் 2019 அக்டோபர் 7 ஆம் நாள் அதிகாலையில் இவர் இறந்தார். அங்கு சக்தி சிதம்பரம் இயக்கிய பீ மாமா படத்தின் படப்பிடிப்புக்காக சென்றிருந்தார்.[10] இவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருந்தனர்.[11]

திரைப்படவியல்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads