குடியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குடியா (Gudea) (சுமேரியம்: 𒅗𒌣𒀀 Gu3-de2-a) பண்டைய அண்மை கிழக்கின் கீழ் மெசொப்பொத்தேமியாவில் இருந்த லகாசு இராச்சியத்தை கிமு 2144 முதல் 2124 முடிய 20 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னர் ஆவார்.[2] இவர் ஊர்-பாபா இராச்சியத்தின் இளவரசி நின்னாலாவை மணந்தவர். இவருக்குப் பின் இவரது மகன் ஊர்-நிங்கிர்சு ஆட்சிக்கு வந்தார்.

,

ஆவணக் குறிப்புகள்
களிமண் பலகைகளில் எழுதப்பட்ட ஆவணக் குறிப்புகளில் மன்னர் குடியா ஊர், நிப்பூர், உரூக், அதாப், போன்ற பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் கடவுள்களுக்கு கோயில் எழுப்பியதால் சுமேரியாவில் புகழுடன் விளங்கியதாக அறிய முடிகிறது. இவருக்கு முன்னிருந்த மன்னர் ஊர் இராச்சியத்தின் மன்னர் ஊர் பாபா தனது மகளை ஊர் நகரக் கோயிலின் தலைமைப் பூசாரியாக நியமித்தார்.
பட்டங்கள்
குடியா மன்னர் தன்னை துவக்கத்தில் லகாசு நகர இராச்சிய மன்னர் என அறிவித்துக் கொண்டாலும், பின்னர் லகாசு இராச்சியத்தின் கடவுளாக அறிவித்துக் கொண்டார்.
ஆட்சி விரிவாக்கம்
ஈலாம் மற்றும் அன்சான் இராச்சியங்களைக் கைப்பற்றினார். களிமண் பலகை குறிப்புகள் மூலம் புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகளிலிருந்து வேளாண்மைக்கு நீர் பாசானக் கால்வாய்கள் அமைத்தல் மற்றும் கோயில்கள் நிறுவுதல் மூலம் குடியா மன்னர் நன்கறியப்படுகிறார்.
இவரது கட்டிட கட்டுமானத்திற்கான பொருட்களான கற்கள், மரங்கள், தங்கம், செப்பு, மணிகள் பண்டைய எகிப்து மற்றும் வடக்கு அரேபியாவிலிருந்து பெறப்பட்டது. அக்காடியப் பேரரசு வலிமை குன்றிய காலத்தில், குடியா மன்னர் லகாசு நகரத்தைக் கைப்பற்றினார்.
குடியாவின் சிலைகள்


ஈராக் நாட்டின் பண்டைய கிர்சு நகரத் தொல்லியல் மேடுகளின் அகழ்வாய்வுகளில் சுண்ணாம்புக் கற்களால் செய்யப்பட்ட சுமேரியாவின் குடியா மன்னரின் 26 கற்சிலைகள், சிற்பத்தூண்கள் கண்டெடுக்கப்பட்டது.
சமயம்



கீழ் மெசொப்பொத்தேமியாவில் அக்காடியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் குடியா மன்னர் நின்குர்சு எனும் சுமேரியப் போர்க் கடவுளைப் போற்றி வழிபட்டார். கீழ் மெசொப்பொத்தேமியாவின் நகர இராச்சியங்களின் செல்வாக்கு, அவர்கள் வழிபடும் கடவுள் மற்றும் கோயிலைப் பொறுத்து வேறுபடுகிறது.
Remove ads
சீர்திருத்தங்கள்
குடியா ஆட்சியில் சமூக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. வேளாண் மக்களின் கடன்களை தள்ளுபடி செய்தல், குடும்பப் பெண்களுக்கு தனி நில உரிமை வழங்குதல் ஆகும். போர்க் கடவுளான நின்கிர்சுவுக்கு லகாசு நகரத்தில் கோயில்கள் பல எழுப்பப்பட்டது. குடிய மக்களின் ஆவணங்களில், செடார் மரங்கள் சிரியா மற்றும் லெபனான் பகுதிகளிலிருந்தும், பாறைகள் கிழக்கு அரேபியா மற்றும் சினாய் தீபகற்பத்திலிருந்தும், செப்பு மற்றும் தங்கம் எகிப்திலிருந்தும் பெறப்பட்டதாக அறியமுடிகிறது.
அக்காடியப் பேரரசர் சர்கோனுக்குப் பின்னர், குடியா மன்னர் தன்னையே கடவுளாக அறிவித்தவர் அல்லது அவரது இறப்பிற்குப் பின்னர் கடவுளாக ஆக்கப்பட்டவர் எனக்கருதப்படுகிறது. குடியா மன்னரின் வீரதீரங்களை கில்கமெஷ் காப்பியத்தில் சேர்க்கப்பட்டதாக அறியப்படுகிறது.
கீழ் மெசொப்பொத்தேமியாவின் ஊரின் மூன்றாவது வம்ச மன்னர் ஊர்-நம்மு குடியா அரச மரபை வீழ்த்தினார்.
Remove ads
குடியா சுடுமண் உருளைத் தூண்கள்


கீழ் மெசொப்பொத்தேமியாவில் அமைந்த லகாசு நகர இராச்சியத்தின் ஆட்சியாளர் குடியா மன்னர், நிங்குர்சு கடவுளுக்கு எழுப்பிய கோயில் குறித்தான குறிப்புகள் இரண்டு சுடுமண் உருளை வடிவத் தூண்களில் சுமேரிய ஆப்பெழுத்துகளில் உள்ளது. இதன் காலம் கிமு 2125 ஆகும். இந்த பெரிய சுடுமண் உருளைகள் கிபி 1877-இல் ஈராக்கின் பண்டைய கிர்சு நகரத்தின் தொல்லியல் மேட்டை அகழாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்டது. தற்போது இது பிரான்சு நாட்டின் பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[3]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads