செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை

மலேசிய கூட்டரசு சாலை 14 From Wikipedia, the free encyclopedia

செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை
Remove ads

மலேசிய கூட்டரசு சாலை 14 அல்லது செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 14 அல்லது Jerangau–Jabor Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 14 அல்லது Lebuhraya Jerangau-Jabor) என்பது தீபகற்ப மலேசியா, திராங்கானு, கோலா திராங்கானு மாவட்டம், கோலா திராங்கானு நகரத்தையும்; [பகாங்]], குவாந்தான் நகரத்தையும் இணைக்கும் கூட்டரசு சாலையாகும்.[3]

விரைவான உண்மைகள் மலேசிய கூட்டரசு சாலை 14 Malaysia Federal Route 14 Laluan Persekutuan Malaysia 14, வழித்தடத் தகவல்கள் ...

179.63 கி.மீ (111.62 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை மலேசியாவின் இரு முக்கிய நகரஙகளான கோலா திராங்கானு நகரம்; மற்றும் குவாந்தான் நகரம்; ஆகிய இரு மாநிலத் தலைநகரங்களையும் இணைக்கும் மிக முக்கியமான சாலையாக அறியப்படுகிறது.

Remove ads

அமைவு

மலேசிய கூட்டரசு சாலை 14; மலேசிய கூட்டரசு சாலை 3-யுடன் இணையாகச் செல்கிறது. இதில் மலேசிய கூட்டரசு சாலை 3 என்பது ஒரு கடலோர நெடுஞ்சாலையாகும்; செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை எனும் மலேசிய கூட்டரசு சாலை 14; உட்புறப் பகுதி வழியாகச் செல்கிறது.

மலேசிய கூட்டரசு சாலை 14; மலேசிய கூட்டரசு சாலை 3; ஆகிய இரண்டு நெடுஞ்சாலைகளும் ஒரே மாதிரியானவை (சுமார் 200 கி.மீ.) நீளம் கொண்டவை. எனினும் மலேசிய கூட்டரசு சாலை 3 எனும் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை தன் வழியில் குறைவான நகரங்களைக் கடந்து செல்கிறது. அந்த வகையில் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை பயண நேரத்தையும் கணிசமாகக் குறைக்கிறது.

2001-ஆம் ஆண்டில் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை கட்டப்படும் வரையில் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலைதான், தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும்.[4]

Remove ads

பொது

மலேசிய கூட்டரசு சாலை 13-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது பகாங் மாநிலத்தின் [[குவாந்தான்] நகரத்தின் மாற்றுவழிச்சாலையில் (Kuantan Bypass) உள்ளது.

மலேசிய கூட்டரசு சாலை 13-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.

இடைமாற்று வழிகளின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் கிமீ, வெளிவழி ...

விளக்கம்

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads