கீமாரி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீமாரி மாவட்டம் (Keamari District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் கராச்சி கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பால்டியா நகரம் ஆகும். பால்டியா நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு மேற்கே15.5 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,422.7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

ஓரங்கி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் 21 ஆகஸ்டு 2020 அன்று புதிதாக நிறுவப்பட்டது.
இதன் மேற்கில் பலூசிஸ்தான் மாகாணம் மற்றும் தெற்கில் அரபுக்கடல் அமைந்துள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 319,121 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 2,068,451ஆகும்[5]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 113.75 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 62.07% ஆகும்[3][6]. இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 545,382 (26.39%) ஆக உள்ளனர்.[7]இம்மாவட்ட மக்கள் அனைவரும் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[3]
சமயம்
இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 98.15% மக்களும், கிறித்துவ சமயத்தை 1.27% மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.09% மக்களும் பின்பற்றுகின்றனர்.[8]
மொழி
இம்மாவட்ட மக்கள் தொகையில் உருது மொழியை 22.05%, பஞ்சாபி மொழியை 10.83%, சிந்தி மொழியை 9.30%, பஷ்தூ மொழியை 33.14%, சராய்கி மொழியை 2.73 %, பலூச்சி மொழியை 7.10%, இந்த்கோ மொழியை 7.75%, பிற மொழிகளை 7.12% மக்கள் பேசுகிறனர்[9].
Remove ads
மாவட்ட நிர்வாகம்
கீமாரி மாவட்டம் எனும் துறைமுக மாவட்டமானது கீமாரி, பால்டியா, மௌரிப்பூர், SITE வட்டம் மற்றும் 4 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[10]
அரசியல்
இம்மாவட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு (National Assembly) இரண்டு தொகுதிகளைக் கொண்டது.
- NA-242 கராச்சி கீமாரி-I
- NA-243 கராச்சி கீமாரி-II
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads