கராச்சி கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கராச்சி கோட்டம் (Karachi Division) (Urdu: کراچی ڈویژن ) பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றான சிந்து மாகாணத்தில் அமைந்த 6 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கராச்சி நகரம் ஆகும். இக்கோட்டத்தின் மேற்கில் பலூசிஸ்தான் மாகாணம் மற்றும் தெற்கில் அரபுக்கடல் அமைந்துள்ளது.

Remove ads
வரலாறு
முந்தைய கராச்சி கோட்டம் 2000-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு, அதன் ஐந்து மாவட்டங்களைக் கொண்டு கராச்சி நகர மாவட்டம் துவக்கப்பட்டது. கராச்சி நகர மாவட்டம் 18 ஊர்களாகவும், 178 கிராமக் ஒன்றியக் குழுக்களாகவும் பிரிக்கப்பட்டது. [1]
பின்னர் 11 சூலை 2011-இல் சிந்து மாகாண அரசு ஐந்து மாவட்டங்கள் கொண்ட கராச்சி கோட்டம் துவக்கியது. [2]
நவம்பர் 2013-இல் கராச்சி மாவட்டத்தில் சில பகுதிகளை கொண்டு கொராங்கி மாவட்டத்தை உருவாக்கி அதனை கராச்சி கோட்டத்தில் இணைக்கப்பட்டது. [3][4]
Remove ads
கோட்டத்தின் மாவட்டங்கள்
கராச்சி கோட்டம் 7 மாவட்டங்களையும், 38 வருவாய் வட்டஙகளையும் கொண்டுள்ளது. கொண்டுள்ளது
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கராச்சி கோட்டத்தின் மக்கள் தொகை 2,03,82,881 ஆகும்.
மொழிகள்
கராச்சி கோட்டத்தில் உருது மொழியை 50.67%, பஞ்சாபி மொழியை 8.08%, சிந்தி மொழியை 11.12%, பஷ்தூ மொழியை 13.51%, சராய்கி மொழியை 3.70%, இந்த்கோ மொழியை 3.21%, பலூச்சி மொழியை 3.97%, பிற மொழிகளை 5.71% % மக்கள் பேசுகின்றனர்.[6]
சமயம்
இக்கோட்டத்தில் இசுலாம் சமயத்தை 95% மேற்பட்ட மக்கள் பின்பற்றுகின்றனர். மீதி 5% மக்கள் இந்து சமயம், கிறித்தவம், அகமதியா மற்றும் பிற சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads