கீழ்க்கட்டளை
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீழ்க்கட்டளை (Keelkattalai) தென் சென்னையின் புறநகர்ப் பகுதியில் பல்லாவர நகராட்சிக்கும்.[3] இப்பகுதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்டதாக உள்ளது. இந்தப் பகுதியில் நடுத்தர மக்களே அதிகம் வாழ்கின்றனர்.
Remove ads
புள்ளிவிவரங்கள்
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி கீழ்க்கட்டளையின் மக்கள் தொகை 27,981 ஆகும்.[4]
வரலாறு
கீழ்க்கட்டளை என்ற பெயர் கிழக்கு (கிழக்கு) மற்றும் கட்டளை (கிராமம்) என்ற சொற்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. பல்லவர் காலத்து குடியேற்றமான பல்லாவரம் என்ற பகுதிக்கு "கிழக்கே உள்ள கிராமம்" என்றும் கொள்ளப்படுகிறது. ஆரம்பத்தில், கீழ்கட்டளை ஒரு கிராமப் பஞ்சாயத்தாக இணைக்கப்பட்டது. 1970 ஆண்டு சனவரி மாதம் 17 அன்று சமீன் பல்லாவரம் நகரப் பஞ்சாயத்துடன் இணைக்கப்பட்டது. ஈசா பல்லாவரம் நகரப் பஞ்சாயத்து, அசுத்தினாபுரம் நகரப் பஞ்சாயத்து மற்றும் நெமிலிச்சேரி பஞ்சாயத்து ஆகியவற்றுடன் கீழ்க்கட்டளை நகரப்பஞ்சாயத்தும் சேர்ந்து பல்லாவரம் நகராட்சியாக அமைக்கப்பட்டது.[6]
போக்குவரத்து வசதி
பெரிய பேருந்து நிலையம் ஒன்று கீழ்க்கட்டளையில் உள்ளது. முக்கியமாக தியாகராய நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர் போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து பல பேருந்துகள் செல்கின்றன. அருகிலுள்ள இரயில் நிலையம் பல்லாவரம் இரயில் நிலையம் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads