மடிப்பாக்கம்

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

மடிப்பாக்கம்map
Remove ads

மடிப்பாக்கம் (ஆங்கிலம்: Madipakkam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டததில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் வேளச்சேரிக்கும், நங்கைநல்லூருக்கும் அருகில் அமைந்து இருக்கிறது.

விரைவான உண்மைகள்
Remove ads

பெயர்க் காரணம்

மடிப்பாக்கத்தின் தெற்குப் பகுதியில் மடு ஒன்று உண்டு. பல்லாவரம், திரிசூலம் குன்றுகளிலிருந்து மழைக்காலத்தில் பெருகும் நீரின் வடிகாலாக இது செயல்பட்டது. இந்த மடுவின் வழியாகவே பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிக்கு நீர் பாயும். மடுப்பாக்கம் என்பதே மறுவி மடிப்பாக்கம் ஆனது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,940 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மடிப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 88% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 85% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மடிப்பாக்கம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கோவில்கள்

புகழ் பெற்ற ஐயப்பன் கோவில் மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது. பொன்னியம்மன், ஒப்பிலியப்பன், வேதபுரீசுவரர் சிவன் கோவில் மற்றும் சில கோவில்களும் இங்கு உள்ளன. சனவரி முதல் தேதி அன்று ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூசைகளும் அன்னதானமும் வருடம் தோறும் நடைபெறுகின்றன.

கல்வி நிலையங்கள்

  • சாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • சாய்ராம் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி
  • பிரின்ஸ் பதின்நிலைப் பள்ளி
  • ஹோலி ஃபேமிலி பள்ளி
  • ஹோலி பிரின்ஸ் பதின்நிலைப் பள்ளி
  • கிங்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி

பேருந்து வழித்தடங்கள்

Remove ads

ஆதாரங்கள்

அமைவிடம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads