குகில வம்சம்
இராஜஸ்தானை ஆண்ட பண்டைய வம்சம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேவாரின் குகிலர்கள் (Guhila dynasty) மேவாரின் குகிலர்கள் என்றும் பேச்சுவழக்கில் அழைக்கப்படும் மெடபட்டாவின் குகிலர்கள் இந்தியாவின் இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மெடபட்டா (நவீன மேவார் ) பகுதியை ஆண்ட ராஜபுத்திர வம்சத்தினராவர்.[1] [2] குகில மன்னர்கள் ஆரம்பத்தில் 8 - 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் கீழ் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். பின்னர் 10ஆம் நூற்றாண்டில் சில காலத்திற்கு இராஷ்டிரகூட ஆட்சியாளர்களாக இருந்தனர்.[3] இவர்களின் தலைநகரங்களில் நகராடா (நக்டா), அகதா (அகர்) ஆகியவை அடங்கும். இந்த காரணத்திற்காக, அவை குகிலாக்களின் நக்டா-அகர் கிளை என்றும் அழைக்கப்படுகின்றன.
11 ஆம் நூற்றாண்டில் கூர்ஜர-பிரதிகாரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு குகிலர்கள் தனித்து ஆட்சி புரிந்தனர். 11-13 ஆம் நூற்றாண்டுகளில், இவர்கள் பரமாரர்கள், சௌகான்கள், தில்லி சுல்தான்கள், சோலங்கியர்கள், வகேலாக்கள் உட்பட பல அண்டை நாடுகளுடன் இராணுவ மோதல்களில் ஈடுபட்டனர். 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பரமார மன்னன் போஜன் குகில சிம்மாசனத்தில் குறுக்கிட்டு, அபோதிருந்த ஒரு ஆட்சியாளரை அகற்றி, கிளையின் வேறு ஒரு ஆட்சியாளரை நியமித்ததாகத் தெரிகிறது.[4]
12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிக்கப்பட்டது. மூத்த கிளை (பின்னர் இடைக்கால இலக்கியங்களில் ராவல் என்று அழைக்கப்பட்டது) சித்ரகூடத்தில் இருந்து (நவீன சித்தோர்கார் ) ஆட்சி செய்தனர். மேலும் 1303 ஆம் ஆண்டு தில்லி சுல்தானகத்திற்கு எதிராக இரத்னசிம்மனின் தோல்வியுடன் வம்சம் முடிவுக்கு வந்தது. மற்றொரு கிளை ராணா என்ற பட்டத்துடன் சிசோதியாவிலிருந்து ஆட்சி செய்து, சிசோதிய இராஜபுத்திர வம்சத்தை உருவாக்கியது.
Remove ads
வரலாறு
ரமேஷ் சந்திர மஜும்தார் இவர்களை பொ.ச. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு தலைமுறைக்கும் 20 வருட ஆட்சி என்று கருதுகிறார். [5] ஆர். வி. சோமானி இவர்களை 6 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டிற்க் கொண்டு செல்கிறார்.[3]
பொ.ச. 977 தேதியிட்ட அத்பூர் கல்வெட்டும் 1083 தேதியிட்ட கத்மல் கல்வெட்டும், குகதத்தன் என்பவன் போஜனுக்குப் பின் ஆட்சிக்கு வந்ததாகத் தெரிவிக்கிறது. இவர் எக்லிங்ஜியில் ஒரு ஏரியைக் கட்டினார். பொ.ச. 1285 தேதியிட்ட அச்சலேசுவர் கல்வெட்டு இவரை விஷ்ணு பக்தராக விவரிக்கிறது.[6] போஜனுக்குப் பிறகு மகேந்திரன் மற்றும் நாகாதித்யன் ஆகியோர் ஆட்சி செய்தனர். பில்களுடனான போரில் நாகாதித்யன் கொல்லப்பட்டதாக இராஜபுதன் நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. [6]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads