சிசோதியர்கள்

இராஜஸ்தானை ஆண்ட இந்தியாவின் பண்டைய வம்சம் From Wikipedia, the free encyclopedia

சிசோதியர்கள்
Remove ads

சிசோதியர்கள் (Sisodia) என்பவர்கள் ராஜஸ்தானில் உள்ள மேவார் பேரரசை ஆண்ட இந்திய இராஜபுத்திர வம்சமாகும். [1]

Thumb
சிசோதிய ஆட்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவரான ராணா கும்பா

தோற்றம்

சிசோதிய வம்சம் அதன் வம்சாவளியை 12ஆம் நூற்றாண்டின் குகில மன்னன் இரணசிம்ம்மனின் மகனான ரகாபாவிடம் கண்டறிந்தது. அவர் தற்போதைய ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள சிசோதா என்ற கிராமத்தை தனது தலைநகராக மாற்றினார். அதன் பிறகு அவரது சந்ததியினர் சிசோதியர்கள் என்று அழைக்கப்பட்டனர். குகில வம்சத்தின் முக்கிய கிளையானது, சித்தோர்கார் முற்றுகையில் கில்ஜி வம்சத்திற்கு எதிரான தோல்வியுடன் முடிவடைந்தது. 1326 ஆம் ஆண்டில், சிசோதியக் கிளையைச் சேர்ந்த ராணா ஹமிர், அப்பகுதியின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்து வம்சத்தை மீண்டும் நிறுவினார். மேலும் குகில வம்சத்தின் ஒரு கிளையான சிசோதிய வம்ச குலத்தின் ஆதரவாளராகவும் ஆனார். சிசோதியர்கள் முன்னாள் குகிலத் தலைநகர் சித்தோர்காரின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றனர். [2] [3] [4]

ராஜ்பிரசாஸ்தி பரம்பரையின்படி, இவர்களில் ஒருவர் - சமர் சிங் - பிருத்திவிராச் சௌகானின் சகோதரியான பிரித்தியை மணந்தார். அவரது பேரன் ரகாபா ராணா (மன்னர்) என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். ரகாபாவின் சந்ததியினர் சிசோதா என்ற இடத்தில் சிறிது காலம் ஆட்சி செய்தனர். எனவே, "சிசோதியர்கள்" என்று அழைக்கப்பட்டனர். [5]

Thumb
உதய்பூர் நகரம் கட்டப்பட்ட பிறகு சிசோதியச் சின்னம்
Remove ads

வரலாறு

ராணா ஹமிர் (ஆட்சி 1326–1364 பொ.ச.), ராணா கும்பா (ஆட்சி 1433–1468 பொ.ச.), ராணா சங்கா (ஆட்சி 1508–1528) மகாராணா பிரதாப் (ஆட்சி 1572–1597) போன்றவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்க சிசோதிய ஆட்சியாளர்கள் ஆவர். மராட்டியப் பேரரசின் நிறுவனர் சிவாஜியின் வம்சாவழியைச் சேர்ந்த போன்சலே குலமும் சிசோதிய அரச குடும்பத்தின் ஒரு கிளையிலிருந்து வந்ததாக உரிமை கோரியது. [6] வரலாற்றாசிரியர் நைன்சி தனது புத்தகத்தில் ஷாஜி ராணா, லகாவின் மகன் சாச்சாவின் வழிவந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். [7] இதேபோல், நேபாளத்தின் ராணா வம்சமும் மேவாரின் ராணாவின் வம்சாவளியைச் சேர்ந்தது. [8]

சிசோதியத் தரவுகளின்படி, தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி 1303இல் சித்தோர்காரைத் தாக்கியபோது, சிசோதிய ஆண்கள் சகா (சாகும்வரை போராடுதல்) நிகழ்த்தினர். அதே சமயம் அவர்களது பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்தனர். இது இரண்டு முறை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது: குசராத்தின் பகதூர் ஷா 1535இல் சித்தோர்காரை முற்றுகையிட்டபோது ஒரு முறையும், முகலாய பேரரசர் அக்பர் 1567இல் அதைக் கைப்பற்றிய போது ஒரு முறையும் நடந்தது. [9]

Remove ads

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads