குக்குலசு

From Wikipedia, the free encyclopedia

குக்குலசு
Remove ads

குக்குலசு (Cuculus) என்பது குயில் குடும்பப் பேரினமாகும். இதில் பெரும்பாலானவை பழைய உலகைச் சார்ந்தவை. பலதரப்பட்ட வெப்பமண்டல வகைகள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் காணப்படுகின்றன.

விரைவான உண்மைகள் குக்குலசு, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

வகைபாட்டியல்

பேரினம் குக்குலசு சுவீடன் நாட்டு இயற்கையாளர் கரோலஸ் லின்னேயசால் 1758-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இவரின் சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] இந்தப் பேரினப் பெயர் "குக்கூ" என்பதது இலத்தீன் வார்த்தையாகும்.[2][3] இந்தப் பேரினத்தின் மாதிரிச் சிற்றினம் பொதுவான குயில் குக்குலசு கேனரசு ஆகும்.[4]

சிற்றினங்கள்

இந்தப் பேரினத்தில் 11 சிற்றினங்கள் உள்ளன:[5]

  • கருங்குயில், குக்குலசு கிளமோசசு
  • செம்மார்பு குயில், குக்குலசு சொலிடேரியசு
  • சிறுகுயில், குக்குலசு போலியோசெபாலசு
  • சுலவேசி குயில் அல்லது சுலவேசி பருந்து-குயில், குக்குலசு கிராசிரோசுட்ரிசு
  • இந்தியக் குயில், குக்குலசு மைக்ரோப்டெரசு
  • மடகாசுகர் குயில், குக்குலசு ரோச்சி
  • ஆப்பிரிக்கக் குயில், குக்குலசு குலாரிசு
  • இமயமலைக் குயில், குக்குலசு சாச்சுரேடசு
  • ஓரியண்டல் குயில், குக்குலசு ஆப்டேடசு (முன்னர் ஹார்சுபீல்டி) (கு. சாட்ரடசிலிருந்து பிரிந்தது)
  • சுண்டா குயில், குக்குலசு லெபிடசு (கு சத்துராசுவிலிருந்து பிரிந்தது)
  • பொதுவான குயில், குக்குலசு கானரசு

பொருத்தமான வகைப்பாடு குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சில ஆதாரங்களில் இந்த பேரினத்தில் பாலிட் குயிலும் அடங்கும்.[6]

பருந்து-குயில் இப்போது கைரோகோசிக்சு என்ற தனி பேரினத்தில் வைக்கப்படுகின்றது. அதே சமயம் பாலிட் குயில் காகோமாண்டிசில் உள்ளது .

இந்த பறவைகள் மெலிந்த உடல்கள், நீண்ட வால்கள் மற்றும் வலுவான கால்கள் கொண்டவை. மாறுபட்ட உருவ அளவு உடையன. திறந்தவெளி காடுகளில் வாழ்கின்றன. பல சிற்றினங்கள் இடம்பெயர்கின்றன.

இவை ஒலி எழுப்பும் சிற்றினங்கள். இவற்றின் அழைப்புகள் உரத்தவையாக இருக்கும். இவை பெரிய பூச்சிகளை உண்கின்றன. பல பறவைகள் உண்ணாத கம்பளிப்பூச்சிகளை இவை உண்ணுகின்றன. ஓரிரு சிற்றினங்கள் பழங்களை உண்ணுகின்றன.

இவை கூடுகட்டாததால் பல்வேறு குருவிகளின் கூடுகளில் ஒரு முட்டையை இடுகின்றன. உதாரணம் ஐரோப்பிய பொதுவான குயில் ஆகும் . ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெண் குயில் கூட்டில் உள்ள முட்டையினை தனது அலகால் நீக்கி முட்டையிடும். குயிலின் முட்டை காக்கா முட்டையை விட முன்னதாகவே குஞ்சு பொரிக்கிறது, மேலும் குஞ்சு வேகமாக வளரும்; பெரும்பாலான சமயங்களில் குயிலின் குஞ்சு காக்கா முட்டை அல்லது காக்கா குஞ்சுகளை வெளியேற்றுகிறது.

குக்குலசு சிற்றினங்கள் இவற்றின் பாசரைன் குருவிகளுடன் பொருந்திய வண்ண முட்டைகளை இடுகின்றன. பெண் குயில்கள் இதில் நிபுணத்துவம் பெற்றவை எனவே இவற்றின் முட்டைகளை ஒத்திருக்கும் பறவைகளின் கூடுகளில் முட்டைகளை இடுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads