சாதாக் குயில்
பறவை இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாதாக் குயில் ( Common cuckoo ) என்பது குயில் வரிசையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இதில் ரோட் ரன்னர், அனி, செம்பகம் போன்ற பறவைகள் அடங்கும்.
இந்த இனம் கோடைக்காலத்தில் ஐரோப்பாவுக்கும், குளிர்காலத்தில் ஆசியாவிற்கும், ஆப்பிரிக்காவுக்கும் வலசை போகிறது . இது ஒரு ஒட்டுண்ணியை அடைகாக்கவைக்கும் பறவை ஆகும், அதாவது இது மற்ற பறவை இனங்களின், குறிப்பாக டன்னாக்ஸ், புல்வெளி பிபிட்ஸ், ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி ஆகியவற்றின் கூடுகளில் முட்டையிடுகிறது. பொதுவாக இதன் முட்டைகள் அந்தப் பறவைகளின் முட்டைகளை விட பெரியதாக இருந்தாலும், ஒவ்வொரு வகை பறவைகளின் கூட்டிலும் இவை இடும் முட்டைகள் அந்தப் பறவைகளின் முட்டைகளை ஒத்திருக்கும்.
Remove ads
வகைபிரித்தல்
இந்த இனத்தின் இருசொல் பெயரானது இலத்தீன் சொல்லான குக்குலஸ் (குக்கூ) மற்றும் கானோரஸ் (மெல்லிசை, பாடுவது என்று பொருள்) ஆகிய இரு சொற்களினால் உருவாக்கபட்டது.[2]
உலகளவில் இதில் நான்கு கிளையினங்கள் உள்ளன:[3]
- C. c. canorus, இந்தக் கிளையினமானது, கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் அவரது லேண்ட்மார்க் 1758 10வது பதிப்பான சிஸ்டமா நேச்சுரேயில் முதன் முதலில் விவரிக்கப்பட்டது. இந்தக் கிளையினமானது அயர்லாந்திலிருந்து எசுக்காண்டினாவியா, வடக்கு உருசியா மற்றும் சைபீரியா வழியாக கிழக்கில் யப்பான் வரையிலும், பைரனீஸிலிருந்து துருக்கி, கசக்கஸ்தான், மங்கோலியா, வடக்கு சீனா மற்றும் கொரியா வழியாகவும் காணப்படுகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் குளிர்காலத்தைக் கழிக்கிறது.
- C. c. bakeri. 1912 இல் ஆர்டெர்ட்டால் முதன்முதலில் விவரிக்கப்பட்டது. அது மேற்கு சீனாவில் இருந்து வட இந்தியா, நேபாளம், மியான்மர், வடமேற்கு தாய்லாந்து மற்றும் தெற்கு சீனாவில் இமயமலை அடிவாரம் வரை இனப்பெருக்கம் செய்கிறது. குளிர்காலத்தில் இது அசாம், கிழக்கு வங்காளம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.
- C. c. bangsi, முதன்முதலில் 1919 ஆம் ஆண்டில் ஓபர்ஹோல்சரால் விவரிக்கப்பட்டது. இது ஐபீரியா, பலேரிக் தீவுகள் மற்றும் வட ஆபிரிக்காவில் இனப்பெருக்கம் செய்து, ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தை செலவிடுகின்றது.
- C. c. subtelephonus 1914 இல் ஜருட்னியால் முதன்முதலில் விவரிக்கப்பட்டது. இது மத்திய ஆசியாவில் துர்கெஸ்தானிலிருந்து தெற்கு மங்கோலியா வரை இனப்பெருக்கம் செய்கிறது. இது குளிர்காலத்திற்காக தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு வலசை போகிறது.
Remove ads
ஆயுட்காலமும் எண்ணிக்கையும்
சாதாரணக் குயில்களின் உலகளாவிய எண்ணிக்கைக் குறைந்து வருவதாகத் தோன்றினாலும், இது இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் 25 மில்லியன் முதல் 100 மில்லியன் வரை இந்தப் பறவை இனம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சுமார் 12.6 மில்லியன் முதல் 25.8 மில்லியன் பறவைகள் ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்கின்றன.[1] ஐக்கிய இராசியத்தில் ஒரு சாதாக் குயில் மிக நீண்ட ஆயுட்காலமாக 6 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 2 நாட்கள் இருந்துள்ளது.[2]
Remove ads
விளக்கம்

புறா அளவுள்ள இந்த சாதாக் குயில் வாலின் இருந்து அலகு வரை 32–34 சென்டிமீட்டர்கள் (13–13 அங்) நீளம் கொண்டது. அதில் வால், 13–15 சென்டிமீட்டர்கள் (5.1–5.9 அங்) நீளமும் கொண்டது. இறக்கைகள் 55–60 சென்டிமீட்டர்கள் (22–24 அங்) நீளம் கொண்டவை.[4] இவற்றின் கால்கள் குட்டையானவை.[5] இப்பறவை குஞ்சிலிருந்து வளர்ச்சியடையும் வரை பலவகை வேறுபாடான தோற்றங்களோடு இது காட்சி தருகிறது. இதனையும் சிட்டுப்பருந்தையும் தோற்றத்தில் வேறுபடுத்தி அறிவது கடினம். குரல்கொண்டே அறிய இயலும். உடலின் மேற்பகுதி சற்றுக் கறுத்த வெளிர் சாம்பல் நிறமாக இருக்கும். பறக்கும் போது சிட்டுப்பருந்தைப் போலவே காணப்படும்.[5]

இதன் உடல் மெலிந்து நீண்ட வாலுடன் காணப்படும். வால் கரும் பழுப்பாக வெள்ளைப் புள்ளிகளோடும் பட்டைகளோடும் காட்சிதரும். இந்தியக் குயிலுக்கு உரிய வால் நுனி கரும்பட்டை இதற்கு இல்லை.
அனைத்து முதிர்ந்த ஆண் பறவைகளின் உடலின் மேற்பகுதி சிலேட் சாம்பல் நிறத்தில் இருக்கும். மோவாய், மேல் கழுத்து, மார்பு ஆகியன வெளிர் சாம்பல் றமாக இருக்கும். கருவிழி, கண்குழி வளையம், அலகின் அடிப்பகுதி பாதங்கள் போன்றவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். முதிர்ந்த பெண் பறவைகளின் தொண்டையும் மேல் மார்பும் சற்றுக் கருஞ்சவப்பு தோய்ந்திருக்கும்.
பரவலும் வாழிடமும்
அடிப்படையில் இது ஒரு திறந்த வெளி நிலப்பறவை ஆகும். சாதாக் குயிலானது கோடையை ஐரோப்பா மற்றும் ஆசியாவிலும் குளிர்காலத்தை ஆப்பிரிக்காவில் கழிக்க வலசை போகும்புலம் . இந்தப் பறவைகள் ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பாவிற்கு வந்து செப்டம்பரில் புறப்படுகின்றன. இப்பறவை பார்படோசு, அமெரிக்கா, கிறீன்லாந்து, பரோயே தீவுகள், ஐசுலாந்து, இந்தோனேசியா, பலாவு, சீசெல்சு, தைவான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் தவறிச் சென்று அலைந்து திரிந்துள்ளது.[1] 1995 மற்றும் 2015 க்கு இடையில், இங்கிலாந்தில் இந்த குயில்களின் பரவல் வடக்கு நோக்கி நகர்ந்தது. இதனால் இங்கிலாந்தில் இதன் எண்ணில்லை 69% குறைந்துள்ளது, ஆனால் ஸ்காட்லாந்தில் 33% அதிகரித்துள்ளது.[6]
Remove ads
நடத்தை
உணவு
சாதாக் குயில்கள் உணவில் பூச்சிகள் முக்கிய இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக மயிருள்ள கம்பளிப்பூச்சிகளை விரும்பி உண்கின்றன. அவற்றை பல பறவைகள் உண்ண விரும்பாதவையாகும்.[7] இது எப்போதாவது முட்டைகளையும், குஞ்சுகளையும் உண்கிறது.[8]
இனப்பெருக்கம்

சாதாக் குயிலுக்கு கூடுகட்டி அடைகாக்கத் தெரியாது. எனவே இது வேறு பறவைகளின் கூட்டில் முட்டையிடும். அப்பறவையும் இதன் முட்டைகள் அடைகாத்து இதன் குஞ்சுகளை பேணி வளர்க்கும். குஞ்சு பொரித்து வெளிவரும் குயில் குஞ்சுகள் தான் பிறந்த கூட்டில் உள்ள மற்ற முட்டைகளை கூட்டிலிருந்து வெளியே தள்ளும் அல்லது அந்தக் குஞ்சுகளுடன் சேர்ந்து வளரும்.[9] பெண் பறவை இனப்பெருக்க காலத்தில் 50 கூடுகள் வரை செல்லும். சாதாக் குயில்கள் இரண்டு வயதில் இருந்து இனப்பெருக்கம் செய்கின்றன.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads