குசிநகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குசிநகர் அல்லது குஷி நகர் (Kushinagar, Kusinagar or Kusinara) இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில், குசிநகர் மாவட்டத்தில் உள்ள நகரப் பஞ்சாயத்தாக உள்ளது. கௌதம புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த நகரம். கோரக்பூரிலிருந்து கிழக்கே 53 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குசிநகரம் அனைத்துலக பௌத்தர்களின் புனித தலமாக விளங்குகிறது.[2][3]
Remove ads
மக்கள் பரம்பல்
2011ஆம் ஆண்டு நடத்தப்ப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குசிநகர மக்கட்தொகை 22,214 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 52%, பெண்கள் 48% ஆக உள்ளது. மொத்தம் 3462 வீடுகள் கொண்டுள்ளது. எழுத்தறிவு விகிதம் 78.43%.[1][4]
அமைவிடம்
கோரக்பூரின் கிழக்கே 53 கிலோ மீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலை எண் 28இல் அமைந்துள்ளது குசி நகரம்.[5][6] அருகில் அமைந்த தொடருந்து நிலையம் கோரக்பூர் ஆகும்.
படக்காட்சியகம்
- புத்தரை எரியூட்டிய இடம்
- வாட் தாய் குசிநகர் தங்க புத்தர் சிலை
- புத்தரின் பரிநிர்வாண கோயில்
- சிதைந்த தூண்கள், குசிநகரம்
- வாட் தாய் மடாலயம்
- புத்திரின் அஸ்தி உள்ள பகுதி
புத்தரின் மகாபரிநிர்வாணக் காட்சி
கௌதம புத்தர் குசிநகரில் தமது 80வது அகவையில் படுத்த கோலத்தில் பரிநிர்வாணம் அடைந்தார். அப்பரிநிர்வானக் காட்சியை குசிநகரில் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads