குறிஞ்சி (திணை)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு சேயோன் தெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி என்று அழைக்கப்பட்டன. "சேயோன் மேய மைவரை உலகமும்" எனத் தொல்காப்பியம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.

இக்கட்டுரை குறிஞ்சி எனும் நிலத்திணையைப் பற்றியது. குறிஞ்சி எனும் பெயர் கொண்ட செடியைப் பற்றி அறிய, குறிஞ்சிச் செடி என்னும் கட்டுரையை பார்க்கவும்
Remove ads

குறிஞ்சி நிலத்தின் பொழுதுகள்

கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள்

Remove ads

குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருட்கள்

  • அக ஒழுக்கம் : புணர்தல்
  • புற ஒழுக்கம் : வெட்சி

குறிஞ்சி நிலப்பகுதிகளில் குரங்கு[சான்று தேவை], கரடி, சிறுத்தை[சான்று தேவை], புலி, யானை, காட்டுப்பன்றி[சான்று தேவை], காட்டு ஆடு[சான்று தேவை] போன்ற விலங்குகளும் வேங்கை, திமிசு[சான்று தேவை], தேக்கு, சந்தனம், அகில், அசோகு[சான்று தேவை], மூங்கில், நாகம்[சான்று தேவை], கடம்பு[சான்று தேவை], கருங்காலி[சான்று தேவை], பலா[சான்று தேவை] போன்ற மரங்களும், குறிஞ்சி, காந்தள், வேங்கை போன்ற மலர் வகைகளும் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads