கே. சிவசங்கர்

நடன அமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கே. சிவசங்கர் (K. Sivasankar, திசம்பர் 7, 1948 - நவம்பர் 28, 2021) என்பவர் ஒரு இந்திய நடன இயக்குநர் ஆவார். இவர் 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் பணியாற்றியுள்ளார், என்றாலும் முதன்மையாக தென்னிந்திய படங்களான, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் எம். சிவசங்கர், பிறப்பு ...
Remove ads

தொழில்

800 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்திருந்துள்ள சிவசங்கர் பூவே உனக்காக (1996), விஷ்வதுளசி (2003), வரலாறு (2006) , உளியின் ஓசை (2008) போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். எஸ். எஸ். ராஜமௌலியின் வரலாற்று நாடகத் திரைப்படமான மகதீரா (2008) படத்தில் பணியாற்றியதற்காக சிவசங்கர் சிறந்த நடனத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். அப்படத்தில் "தீரா தீரா தீரா" பாடலில் "புதுமைகளை காட்டியதை" நடுவர்கள் கவனித்து இவருக்கு பரிசு வழங்கப்பட்டது.[1][2] உத்தியோகபூர்வ விழா குறித்த இவரது அனுபவம் ஊடகங்களில் செய்தியானது. காரணம் இவரை அந்த இடத்திற்கு அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டதை விமர்ச்சித்தார்.[3] . 2003 ஆம் ஆண்டில், திருடா திருடி படத்தின் புகழ்பெற்ற பாடலான மன்மத ராசா பாடலில் அதி விரைவான நடனம் குறித்து பரவலாக பேசப்பட்டது. 2003 ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள நியூ இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தில் நடனத்திற்கான சேவைகளுக்காக இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[4]

சிவசங்கர் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கே. எஸ். ரவிக்குமாரின் வரலாறு (2006) படத்தில் அஜித் குமாரின் நடன ஆசிரியராக நடித்தார். நடனக் காட்சிகளை வடிவமைக்க நடன இயக்குனரிடம் கேட்கப்பட்டது, மேலும் படத்தில் அதிரடி காட்சிகளையும் அஜித்தின் பெண்மை துலங்கும் உடல் மொழியையும் வடிவமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.[5] பின்னர் இவர் பாலாவின் வரலாற்று நாடகப் படமான பரதேசி (2013) படத்தில் இவர் அப்பாவி தேயிலை தோட்டத் தொழிலாளர்களை மதம் மாற்றும் பணியில் ஈடுபடும் ஒரு கிறிஸ்தவ சமய பரப்புநர் பாத்திரத்தை ஏற்று நடித்தார்.[6]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

நடன ஆசிரியர் சிவசங்கர் 1948 திசம்பர் 07 அன்று சென்னை பாரிஸில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் கல்யாண சுந்தரம் மற்றும் கோமளம் அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தை கொத்தவால் சாவடியில் மொத்த பழ விற்பனையாளராக இருந்தார். ஒரு விபத்தின் காரணமாக அவர் இளம் வயதிலேயே முதுகெலும்பு முறிவுக்கு ஆளானார். அதற்காக இவர் 8 வயது வரை தனது அத்தைகளால் பராமரிக்கப்பட்டார். இவர் வீட்டிலேயே பயின்றார். ஆனால் பிற்காலத்தில் இவர் சௌகார்பேட்டடை பிரம்மஞானசபை இந்து மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். குடும்பத்தில் பெண்களாலேயே பெரும்பாலும் இவர் கவனித்து வளர்க்கபட்டதால் வெளி உலக தொடர்பு இல்லாமல் வளர்ந்தார். இதுவே தனது பெண்மை சாயல் கொண்ட நடத்தைக்கு காரணம் என்று அண்மையில் குறிப்பிட்டார். இவரது தந்தை கர்நாடக இசை, ஜோதிடம் போன்றவற்றில் அளப்பரிய அறிவு திறனுள்ளவராக இருந்தார். ஆனால் தனது குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். அதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை கர்நாடக இசை விழாவில் கலந்துகொண்டபோது, அவரை பிரதிநிதியாக நாடகம் மற்றும் நடன விழாக்களுக்கு செல்லுமாறு சிவசங்கரிடம் கேட்கப்பட்டது. இது இவர் நடனத்தைக் கற்றுக்கொள்ள ஊக்கமள்ளிப்பதாக அமைந்தது. மைலாப்பூரில் உள்ள நட்ராஜ் மற்றும் சகுந்தலாவிடம் நடனத்தில் அடிப்படைகளை கற்றுக்கொண்டார். பின்னர், இவர் 1974 இல் நடன அமைப்பாளர் சலீமின் உதவியாளராக சேர்ந்தார்.

Remove ads

குறிப்பிடத்தக்க திரைப்படவியல்

நடன இயக்குநராக

நடிகராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

தேசிய திரைப்பட விருதுகள்

தமிழ்நாடு அரசு திரைப்பட விருது

மறைவு

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நவம்பர் 28, 2021 அன்று தமது 72வது வயதில் மறைந்தார்.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads