கே. வி. ஆனந்த்

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia

கே. வி. ஆனந்த்
Remove ads

கே. வி. ஆனந்த் (K. V. Anand, 30 அக்டோபர் 1966 – 30 ஏப்ரல் 2021) ஒரு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் ஆவார். இவர் கனா கண்டேன் (2005), அயன் (2009) திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குநராகப் பெயர் பெற்றார். அதற்கு முன்னரே, பல இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் பணியாற்றினார். அப்போது தனது நுட்பமான ஒளிப்பதிவு திறமைக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும் பாராட்டப்பட்டார்.[3]

விரைவான உண்மைகள் கே. வி. ஆனந்த், பிறப்பு ...
Remove ads

இளமைக் காலம்

ஆனந்த் 1966 அக்டோபர் 30 அன்று இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையில் கரிமனல் முணுசாமி வெங்கடேசன் மற்றும் அனசூயா வெங்கடேசன் ஆகியோருக்கு பிறந்தார். இவர் குழந்தை பருவத்தில் பழவேற்காட்டில் வளர்ந்தார். பின்னர் ஜூன் 1986 இல் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சென்னை இலயோலாக் கல்லூரியில், முதுகலை பட்டம் பெற்றார். ஆனந்த் கல்லூரியின் வருடாந்திர இறுதி நாட்களில் இமயமலையில் மலையேற்றப் பயணங்களில் பங்கேற்றார். இந்தியாவின் பல்வேறு தொலைதூர இடங்களுக்கு, அவரது ஆய்வுப் பயணங்கள் புகைப்படம் எடுப்பதில் அவருக்கு ஆர்வத்தைத் தூண்டின. ஆனந்த், கல்லூரியில் மாநில மற்றும் தேசிய அளவிலான புகைப்பட போட்டிகளில் பங்கேற்றார். அவரது காட்சி படங்கள் அவருக்கு ஏராளமான புகைப்பட விருதுகளைப் பெற்றன.

Remove ads

இறப்பு

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கே. வி. ஆனந்த் வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில், ஏப்ரல் 30, 2021 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதிகாலை 3 மணியளவில் காலமானார்.[4][5]

திரைப்படங்கள்

ஒளிப்பதிவாளராக

மூலம்:[6]

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

இயக்குநராக

மூலம்:[6]

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

நடிகராக

மூலம்:[6]

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads