கே. வெங்கடப்பா

இந்தியக் கலைஞர் (1886-1965) From Wikipedia, the free encyclopedia

கே. வெங்கடப்பா
Remove ads

கே. வெங்கடப்பா (K. Venkatappa) ஓர் முன்னோடி ஓவியரும், சிற்பியும், வீணை இசைக்கலைஞரும் ஆவார். இன்றைய கருநாடக மாநிலத்தின் மைசூர் சமஸ்தானத்தில் அரசவை ஓவியர்களின் குடும்பத்தில் பிறந்த இவர் அபனிந்திரநாத் தாகூரின் மாணவராவார்.[1] தனது நீர்வர்ணங்களுக்காகவும், விவேகமான யதார்த்தவாதத்திற்காகவும் மிகவும் பிரபலமானவர். இவரது உதகமண்டலம் பற்றிய நீர்வண்ணங்கள் இவரது சுயாதீனமான பார்வையை பிரதிபலிக்கின்றன.

விரைவான உண்மைகள் கே. வெங்கடப்பா, பிறப்பு ...

1974ஆம் ஆண்டில், கர்நாடக அரசு பெங்களூரில் வெங்கடப்பாவின் பெயரில் வெங்கடப்பா கலைக்கூடம் என்ற ஒரு கலைக்கூடத்தை நிறுவியது.[2] இதில் இவரது நீர்வண்ணங்கள் மற்றும் சாந்து பூசிய நிவாரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Remove ads

இளமை வாழ்க்கை

மைசூர் இராச்சியத்தின் அரசவை ஓவியர்களாகவும், விஜயநகர மன்னர்களின் கீழ் கைவினைக் கலைஞர்களாகவும் இருந்த சித்திரகாரர்களின் குடும்பத்தில் வெங்கடப்பா பிறந்தார். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரையக் கற்றுக்கொடுக்கப்பட்டு, நான்காம் கிருட்டிணராச உடையாரின் அரண்மனையில் தனது தந்தைக்கு உதவினார். இவரது திறமைகளைப் பாராட்டிய மகாராஜா, 1909 முதல் 1916 வரை கொல்கத்தாவிலுள்ள அரசு கலைப் பள்ளியில் இவர் சேர உதவி புரிந்தார்.[3] அங்கு, வெங்கடப்பா அபனிந்திரநாத் தாகூரின் கீழ் நந்தாலால் போஸ் போன்ற மாணவர்களுடன் படித்தார்.

Remove ads

ஆரம்பகாலக் கலைஞராக

இவரது காலத்தில் ரவி வர்மாவைப் பின்பற்றி மைசூர் அரசவையில் வரையப்பட்ட எண்ணெய் ஓவியங்களுக்கு மாறாக வெங்கடப்பாவின் ஓவியங்கள் பெரும்பாலும் நீர் வண்ணங்களாக இருந்தன. வெங்கடப்பா தன்னை அரசவையிலிருந்து விலக்கிக்கொண்டார். தன்னை அரண்மனை அல்லது பிற நிறுவனங்களுடன் பிணைக்கும் நிலைகளை நிராகரித்து, நவீன பாணியில் ஓவியம் வரைந்தார்.[4] தனக்கு வீணை மேல் இருந்த ஆர்வம் காரணமாக பெரும்பாலும் ஓவியத்தை கைவிட்டார். ஜேம்ஸ் கசின்ஸ் என்ற ஐரிஷ்-இந்திய எழுத்தாளரால் கண்டுபிடிக்கப்பட்டு 1924 இல் மைசூர் இளவரசனுக்கு விற்பனை செய்யப்படும் வரை இவரது ஓவியங்கள் கலை உலகத்திலிருந்து தூரத்தில் வைத்திருந்தது".[5]

நந்தலால் போஸ் மற்றும் பிறருடன் சேர்ந்து, வெங்கடப்பா பிரித்தானியக் கலைஞர் லேடி ஹெர்ரிங்கம் என்பவருக்கு அஜந்தா சுவரோவியங்களை நகலெடுக்க உதவினார்.

Remove ads

நீர்வண்ணங்கள்

1926 ஆம் ஆண்டில், வெங்கடப்பா உதகமண்டல நிலப்பரப்புகளை ஓவியமாக்கத் தொடங்கினார். 1934 ஆம் ஆண்டில் கொடைக்கானலின் நிலப்பரப்புகளை உருவாக்கினார்.[6] இவரது உதகமண்டல நீர்வண்ணங்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று கூறப்படுகிறது. மகாத்மா காந்தி மைசூருக்கு சென்று வெங்கடப்பாவின் ஓவியங்களைப் பார்த்தார். மேலும் தனது இதழான யங் இந்தியாவில் எழுதினார்.[7]

பிற்காலக் கலை

1926ஆம் ஆண்டில், வெங்கடப்பா பெங்களூரில் ஓவியப் பள்ளி ஒன்றைத் தொடங்க முடிவு செய்தார். மேலும் இதில் தனது படைப்புகளை விற்கவும் மறுத்தார்.[8] இருப்பினும், விரைவில் மைசூர் அரசவையில் மீண்டும் தக்கவைக்கப்பட்டார். மைசூர் அரண்மனையில் தொடர்ச்சியான அடிப்படை சிற்பங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றார். வெங்கடப்பாவுக்கு அரண்மனையில் ஒரு அரங்கம் வழங்கப்பட்டது.1940ஆம் ஆண்டுகளில் இந்தப் பணிகளை தொடர்ச்சியாக இவரால் முடிக்க முடியவில்லை. அப்போது தனது தந்தையின் மரணத்திற்கு பதவிக்கு வந்த ஜெயச்சாமராஜா உடையார் இவரை அரண்மனையை விட்டு காலி செய்யுமாறு உத்தரவிட்டார். இங்கிருந்து வெளியேறிய வெங்கடப்பா தனது உழைப்புக்கான இழப்பீட்டிற்காக அரண்மனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வெங்கடப்பா 1965இல் இறக்கும் வரை எந்த புதிய வேலையையும் செய்யவில்லை.[9] இருப்பினும், இவரது நிவாரணப் பணிகள் கருநாடக அரசால் நிறுவப்பட்ட நவீனக் காட்சிக் கலைகூடத்தில் வைக்கப்பட்டன.

Remove ads

புகைப்படங்கள்

மேற்கோற்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads