கோடைக்கானல் (திரைப்படம்)

2008 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோடைக்கானல் (Kodaikanal) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் பரபரப்புத் திரைப்படம் ஆகும். டி. கே. போஸ் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் அஸ்வந்த் திலக், பூர்ணா, சேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மேலும் இதில் காண்டீபன், வடிவுக்கரசி, செந்தில், சிசர் மனோகர், அலெக்ஸ், பயில்வான் ரங்கநாதன், விஜய் கிருஷ்ணராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஆர். சுவர்ணலட்சுமி தயாரித்த இப்படத்திற்கு, தேவா இசை அமைத்தார். படமானது14 நவம்பர் 2008 அன்று வெளியானது.[1][2]

விரைவான உண்மைகள் கோடைக்கானல், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

ராசாவே உன்னெ நம்பி (1988), என்னை விட்டுப் போகாதே (1988), பொங்கி வரும் காவேரி (1989) போன்ற படங்களை இயக்கிய டி. கே. போஸ், ஒரு இடைவெளிக்குப் பின் கொடைக்கானல் என்ற காதல் பரபரப்புத் திரைப்படத்தின் வழியாக மீண்டும் இயக்க வந்தார். இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள மலை விடுதியில் படமாக்கப்பட்டது. புது முகம் அஸ்வந்த் திலக், பின்னணி குரல் கலைஞர் சேகர், மலையாள நடிகை பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். படத்தின் படப்பிடிப்பின் போது, படத்தில் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக பூர்ணா மீது இயக்குநரும், தயாரிப்பாளரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தனர்.[3][4][5]

Remove ads

இசை

திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தேவா அமைத்தார். 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், பிறைசூடன், யுகபாரதி ஆகியோர் எழுதிய ஆறு பாடல்கள் இருந்தன.[6] படத்தின் இசையை சென்னையில் கமல்ஹாசன் வெளியிட்டார், பாரதிராஜா முதல் இசை வட்டைப் பெற்றார். இயக்குநர் ராம நாராயணன், தயாரிப்பாளர் கே. பிரபாகரன், டிஜிபி வைகுந்த், தயாரிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் இசை வெளியீட்டில் கலந்து கொண்டனர்.[7][8][9]

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...

வெளியீடு

இந்த படம் 14 நவம்பர் 2008 அன்று பெரும் பொருட் செலவில் தயாரான வாரணம் ஆயிம் படம் வெளியான சமயத்தில் வெளியானது.[10]

வணிகம்

இந்தப் படம் சென்னை மண்டலத்தில் சராசரியாக வசூலை ஈட்டத் தொடங்கியது. முதல் வாரம் நான்காவது இடத்தில் தொடங்கி மூன்றாவது வாரத்தில் ஒன்பதாவது இடத்தில் முடிந்தது.[11][12][13] படம் வணிக ரீதியாக தோல்வியாக அறிவிக்கப்பட்டது.[14]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads