கே. பி. சேகர்
தமிழ் பின்னணி குரல் கலைஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ருத்ராபதி சேகர் என அழைக்கப்படும் கே. பி. சேகர் (K. P. Sekar) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட பின்னணி குரல் கலைஞர் ஆவார். இவர் சாருக் கான் உள்ளிட்டவர்களுக்கு தமிழ் படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.[1][3] இவர் தமிழக அரசிடமிருந்து தமிழக அரசு திரைப்பட விருதைப் பெற்றவர்.
Remove ads
தொழில்
சேகர் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கே. பி. ருத்ராபதி இயக்குநர் ஏ. பி. நாகராசன் கீழ் பணியாற்றியவர்.[1] சேகர் குழந்தை கலைஞராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் நேரடி தமிழ் படமான பவித்ரா (1994) படத்தில் அஜித் குமாரின் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்து அதன் மூலம் அறிமுகமானார. அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்திற்காக பிரபாசுக்கு பின்னணி குரல் கொடுத்தது அதன் வழியாக தொழில் வாழ்வில் ஏற்றம் கண்டார். விவேகம் படத்திற்காக விவேக் ஒபரோய்க்கு பின்னணி குரல் கொடுத்தார்.[3] இவரது மற்ற முக்கிய படங்களாக காதல் தேசம், உள்ளம் கேட்குமே, பயணம் ஆகியவை அடங்கும். மலரினும் மெல்லிய (2011) படத்திற்காக சிறந்த ஆண் பின்னணி குரல் கலைஞருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை பெற்றார். இவர் முக்கியமாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் தெலுங்கு, இந்தி, ஆங்கில படங்களுக்கு தமிழ் பின்னணி குரல் கொடுக்கிறார், இதில் மார்வெல் காமிக்ஸ் யுனிவர்ஸ் படங்களான டெட்பூல் , ஆண்ட் மேன் அண்ட் தி வாஸ்ப், எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. பெருவெற்றி தெலுங்குத் திரைப்பட மாவீரன் படத்தின் தமிழ் மொழியாக்கத்தில் பின்னணி குரல் கொடுத்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியான சாருக் கான் தொகுப்புரை வழங்கிய இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான கௌன் பனேகா குரோர்பதி பருவம் 2 ஐ இவர் தமிழில் குரல் கொடுத்து மொழியாக்கம் செய்தார்.[1] மேலும் இவர் கொடைக்கானல், என்னை அறிந்தால், அடங்க மறு உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
சேகர் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு அக்ஷாந்த் தேஜ் மற்றும் வில்வா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[1]
திரைப்படவியல்
நடிகராக
பின்னணி குரல் கொடுத்த பாத்திரங்கள்
தமிழ்ப் படங்கள்
தமிழ் மொழிமாற்று படங்கள்
தமிழ் தொலைக்காட்சி மொழிமாற்று தொடர்கள்
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads