உம்மன் சாண்டி

கேரள மாநிலத்தின் 10வது முதலமைச்சர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

உம்மன் சாண்டி (Oommen Chandy, மலையாளம்: ഉമ്മന്‍ ചാണ്ടി, 31 அக்டோபர் 1943 – 18 சூலை 2023) இந்திய அரசியல்வாதியும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் 2004 முதல் 2006 வரையும் பின்னர் 2011 முதல் 2016 வரையும் முதலமைச்சராகப் பணியாற்றினார்.[1] 2006 முதல் 2011 வரை கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.[2] இவர் 1970 முதல் 2023 இல் இறக்கும் வரை புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக மிக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் இவர் ஒருவரே ஆவார், அத்துடன் இந்திய மாநில சட்டமன்ற வரலாற்றில் மிக நீண்டகாலம் பதவியில் இருந்தவரும் இவரே ஆவார். ஐக்கிய நாடுகள் அவையினால் பொது சேவைக்காக விருது வழங்கப்பட்ட ஒரேயொரு இந்திய முதலமைச்சரும் இவராவார்.[3]

விரைவான உண்மைகள் உம்மன் சாண்டிOommen Chandy, கேரளத்தின் 10-ஆவது முதலமைச்சர் ...

2018 சூன் 6 இல், காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான அனைத்திந்திய காங்கிரசுக் குழுவின் பொதுச் செயலாளராக இவரை நியமித்தார். இவரது கடைசிக் காலத்தில் காங்கிரசு காரியக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads