சங்ககாலப் பாண்டியர்

From Wikipedia, the free encyclopedia

சங்ககாலப் பாண்டியர்
Remove ads

சேர, சோழ, பாண்டியர் தமிழ்நாட்டைச் சங்ககாலத்தில் ஆண்டு வந்த அரசர்கள் ஆவர். இவர்களை மூவேந்தர் என வழங்குகிறோம். இவர்கள் ஆண்ட நிலப்பகுதியை முறையே சேரநாடு, சோழநாடு, பாண்டிய-நாடு [1] எனக் குறிப்பிடுகிறோம். இவற்றை இருப்பிடம் நோக்கிக் குடபுலம், குணபுலம், தென்புலம் எனச் சங்ககாலத்திலேயே வழங்கிவந்தனர்.

மேலதிகத் தகவல்கள் சங்ககால வரலாறு ...
Remove ads

முச்சங்க வரலாறு கூறும் பாண்டியர்

தலைச்சங்கம் - காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாக 89 அரசர்கள்
இடைச்சங்கம்வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் ஈறாக 59 அரசர்கள்
கடைச்சங்கம்முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 அரசர்கள்

இவர்களது பெயர்களின் அகரவரிசை:

  1. உக்கிரப் பெருவழுதி
  2. கடுங்கோன்
  3. காய்சின வழுதி
  4. முடத்திருமாறன்
  5. வெண்டேர்ச் செழியன்

புறநானூற்றுப் பாண்டியர்

புறநானூறு என்னும் நூல்தொகுப்பில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட பாண்டிய அரசர்களின் பெயர்கள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ள. இவர்களது பெயருக்கு முன்னால் 'பாண்டியன்' என்னும் அடைமொழி உள்ளது. ஒப்புநோக்க எளிமைக்காக இந்த அடைமொழியை விடுத்து இங்குப் பெயர்களைத் தொகுத்துள்ளோம். பகுத்தறிய உதவும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதிப்பெயர் முதனமைக்குறிப்பு செய்யப்பட்டு அகரவரிசையில் பெயர்கள் அடுக்கப்பட்டுள்ளன.

இந்த அரசர்கள் இன்னின்ன புறநானூற்றுப் பாடல்களில் போற்றப்பட்டுள்ளனர் என்னும் குறிப்பு அந்தந்த அரசர்களின் பெயருக்குப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன.

  1. அறிவுடைநம்பி [2]
  2. செழியன்தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் [3]
  3. செழியன் - நம்பி நெடுஞ்செழியன் [4]
  4. செழியன் – நெடுஞ்செழியன் [5]
  5. பஞ்சவர் [6]
  6. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு [7]
  7. மாறன் – பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் [8]
  8. மாறன் – பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் [9]
  9. வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி [10]
  10. வழுதி – பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி[11]
  11. வழுதி – பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி [12]
  12. வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி [13]
Remove ads

புறநானூறு சுட்டும் பாண்டியன்

சிலப்பதிகாரம் சுட்டும் பாண்டியர்

பாண்டியன்-புலவர்

  1. அறிவுடைநம்பி [15]
  2. நெடுஞ்செழியன் – ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் [16]
  3. நெடுஞ்செழியன் – தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் [17]
  4. பூதப்பாண்டியன் – ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் [18]
  5. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு [19]

பாண்டினின் சேர்த்தாளி

  1. வெள்ளியம்பலத்துத் துஞ்சிய மாறன்வழுதி + குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் [20]

பிற சங்கப்பாடல்களில் பாண்டியர்

செழியன்
  • பொற்றேர்ச் செழியன் [21]
பாண்டியன்
வழுதி
  • வழுதி [24]
  • பசும்பூண் வழுதி [25]

தொகுப்பு வரலாறு

மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் [26][27] பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் [28] தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும்.

பாண்டியர்

அறிவுடை நம்பி (பாண்டியன்) உக்கிரப் பெருவழுதி (கானப்பேரெயில் கடந்தவன், தந்தவன்) கீரஞ்சாத்தன் (பாண்டியன்) நன்மாறன் (பாண்டியன், இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன்) நெடுஞ்செழியன் (நம்பி) நெடுஞ்செழியன் (பாண்டியன், தலையாலங்கானத்துச் செரு வென்றவன்) பூதபாண்டியன் பெருவழுதி (பாண்டியன், பல்யாகசாலை, முதுகுடுமி) பெருவழுதி (பாண்டியன், வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன்) மாறன் வழுதி (பாண்டியன், கூடகாரத்துத் துஞ்சியவன்) வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

Remove ads

அடிக்குறிப்பு

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads