சடையவர்மன் பராந்தக பாண்டியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி. 1150 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த இவனது மெய்க்கீர்த்தி "திருவளர் செயம் வளரத் தென்னவர் தம்குலம் வளர" என இருக்கும்.சேர மன்னனொருவனை வென்று அவனிடம் திறை வசூலித்து,காந்தளூர்ச் சாலையில் களம் அறுத்து.விழிஞத்தைக் கைப்பற்றி தென் கலிங்க நாட்டில் தெலுங்கு வீமனை வென்று திருவனந்தபுரத்தில் திருமாலிற்கு மணிவிளக்குகளும் அளித்த பெருமையினை உடையவனுமாவான்.கூபகத்தரசன் மகளை மணம் செய்து கொண்ட இவன் அளப்பன,நிறுப்பன ஆகிய கருவிகளுக்கு அரச முத்திரை இட வைத்தான்.அதுவே கயல் முத்திரையாகும்.பாண்டியர்களின் குலதெய்வமான கன்னி பகவதிக்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா நடத்தி அடியார்களுக்கு உணவிட்ட பெருமையையும் உடையவன் சடையவர்மன் பராந்தக பாண்டியன்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads