தென்காசிப் பாண்டியர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த வந்த பாண்டியர் அனைவரும் தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர்.[1] பதினான்காம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் ஏற்பட்ட சுல்தானியர், விஜயநகரத்தவர், நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும்.[2][3] சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்து பாண்டியரும் தென்காசியையே தலைநகராகக் கொண்டு தென்காசி பெரியகோயிலில்[4] உள்ள சிவந்தபாதவூருடைய ஆதீன மடத்தில்[5] முடி சூட்டிக்கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தார், வள்ளியூர், உக்கிரன் கோட்டை போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். தென்காசி பெரியகோயில், பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன. தென்காசிப் பாண்டியர்களில் கொல்லங்கொண்டான் என்பவனே பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.

Remove ads
பட்டியல்
- தென்காசியை தலைநகரமாய் கொண்டு ஆண்ட பாண்டியர்களின் பட்டியல்.
- வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையிலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர்.[6] அதன் பிறகு யார்? யார்? பாண்டியர்கள் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு அழிந்து போனார்கள்.
- புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்
Remove ads
வேறு பெயர்கள்
- சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்கு முன் தென்காசி 16 பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டது.[7] அவை
- சச்சிதானந்தபுரம்
- முத்துத்தாண்டவநல்லூர்
- ஆனந்தக்கூத்தனூர்
- சைவமூதூர்
- தென்புலியூர்
- குயின்குடி
- சித்தர்வாசம்
- செண்பகப்பொழில்
- சிவமணவூர்
- சத்தமாதரூர்
- சித்திரமூலத்தானம்
- மயிலைக்குடி
- பலாலிங்கப்பாடி
- வசந்தக்குடி
- கோசிகை
- சித்தர்புரி
மதுரையை பாண்டியர் இழந்தது
விஜயநகரப் பேரரசும் நாயக்கர்களும் 14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மதுரையை ஆண்டிருந்தாலும், அவ்வப்போது சில பாண்டியர்கள் இவர்களை எதிர்த்தும் வந்தனர். சில நேரங்களில் மதுரையையும் ஆண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் சடையவர்மன் விக்கிரம பாண்டியனும் (பொ.ஊ. 1401 - 1422) அவனின் மகனான அரிகேசரி பராக்கிரம பாண்டியனும் ஆவர்.[8] இவர்கள் மதுரையை சுற்றி 32 கோட்டைகளைக் கட்டினர். பின் விசுவநாத நாயக்கர் மதுரை மண்டலேசுவரனாக ஆன பின்னர் மீண்டும் பாண்டியர் தனியாட்சி கோருவர் எனப்பயந்து மதுரையை 72 பாளையங்களாகப் பிரித்தான். அதில் பாண்டியர்களுக்கு எதிராக இருந்த சிலருக்கு .[9]பதவிகள் பல தந்து பாண்டியர்களிடம் அண்டவிடாமல் அவர்களைத் தனியர்களாக்கினான். அதனால் பாண்டியர் மதுரையை நிரந்தரமாக இழக்க வேண்டியதாயிற்று.[8]
செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை
செண்பகப்பொழில் என்றால் செண்பக மரம் நிறைந்த மழைக்காடுகள் என்று பொருள்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம்[10] செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்குக் கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தைக் கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்தக் கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.[7]
Remove ads
ஆதாரங்கள்
பாண்டிய குலோதயம்

பாண்டிய குலோதயம் என்பது தென்காசி பாண்டியர் காலத்தின் மண்டலக் கவி ஒருவரால் எழுதப்பட்ட பாண்டியர் வரலாற்று நூலாகும்.[1] அதில் உள்ள தகவல்கள்,[11]
- சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.
- அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.
- சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னனாவான்.
நாணயவியல்
தென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே நாணயங்கள் வெளியிட்டப்பட்டன. இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான ஆகவராமன் என்னும் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த நாணயங்களை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.
Remove ads
நகரமைப்பு
- பாண்டியர் கால தென்காசி நகரமைப்பு காசி விசுவநாதராலயத்தை மையமாகக் கொண்டமைந்தது. ஆலயத்தைச் சுற்றி சதுர வடிவில் அடுத்தடுத்து வீதிகளமைந்திருந்தன. தென்காசி பாண்டியர் உக்கிரன் கோட்டையைப் படைத்தளமாகக் கொண்டிருந்தனர்.[12]
கலை
- திருக்குற்றாலநாதர் கோயில்
- தென்காசி கோயில்
- குலசேகரநாதர் கோயில்
- தென்காசி பெரிய கோவில் சுரங்கப்பாதை
முக்கியக்கோயில்கள்
தென்காசி ஆலயச்சிறப்பு
வாயுவாசல் (சடையவர்மன் பராக்கிரம்ம பாண்டியன் வாயில்)
- இக்கோபுர நுழைவாசலமைப்பு வாயுவாசலெனப்படும். அச்சன்கோயில், ஆரியங்கா வழிவரும் தென்பொதிகை தென்றல் இவ்வாயுவாசல் வழி வருகிறது. இதனால் ஆடி எதிர்காற்றில் இங்கு நுழைவது கடினம். பால சுப்பிரமணியர் கோயில் வெளியில் இசைத்தூண்கள் உண்டு.
ஒற்றைக் கல் சிலைகள்
மூலம்:தமிழ்வு[2]
இறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க மண்டபத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிற்ப அதிசயங்கள் சிலவற்றைக் காணலாம். இம்மண்டபத்தில் பின்வரும் 16 வியத்தகு சிலைகள் உள்ளன.
- அக்னி வீரபத்திரர்
- ரதிதேவி
- மகா தாண்டவம்
- ஊர்த்துவ தாண்டவம்
- காளிதேவி
- மகாவிஷ்ணு
- மன்மதன்
- வீரபத்திரர்
- பாவை
- பாவை
- தர்மன்
- பீமன்
- அர்ச்சுனன்
- நகுலன்
- சகாதேவன்
- கர்ணன்
- மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை. நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர் காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகள். அளவிலும், அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம்.தென்காசி கோவிலின் சிற்பங்கள் தென்காசி ஆண்ட பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய கலைச் செல்வங்கள்.
சுரங்கப்பாதைகள்
தற்போதும் பெரிய கோயிலில் அடைக்கப்பட்ட சுரங்கப்பாதை நுழைவாயில் காணப்படுகிறது. இதில் நான்கு சுரங்கப்பாதைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
- கிழக்கு நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதை சுந்தரன் பாண்டியபுரத்தில் உள்ள விந்தன்கோட்டைக்கு செல்வதாகத் தற்போதும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.[13]
- மற்றொரு பாதை குலசேகர நாதர் கோவில் வழியாகச் செல்வதாகக் கூறப்படுகிறது.
திருமலாபுரம் ஓவியங்கள்
- தென்காசி அருகில் திருமலாபுரம் மலையில் ஒரு குகைக் கோவில் உள்ளது. இது கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் என்னும் ஊர் செல்லும் வழியில் உள்ளது இது சிவனுக்காக வடிக்கப்பட்டதாகும். இக்கோவிலில் பாண்டியர் காலத்து வண்ண ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களை முதலில் கண்டுபிடித்தவர் அறிஞர் தூப்ராய் ஆவார். திருமலைப்புரக் குகைக் கோவில் ஓவியங்கள் பாண்டியர் காலத்து ஒவியக்கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.[14]
இலக்கியங்கள்
இவை தவிர்த்துப் பாண்டிய குலோதயம் என்னும் வரலாற்று நூலை மண்டலக்கவி ஒருவரும் தென்காசி பாண்டியர்களின் காலத்தில் இயக்கியுள்ளனர்.
Remove ads
உசாத்துணை
- தென்காசி தல புராணம்.
- பாண்டியர் வரலாறு.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads