சந்தோஷ் சுப்பிரமணியம்

மோ. ராஜா இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சந்தோஷ் சுப்பிரமணியம்
Remove ads

சந்தோஷ் சுப்பிரமணியம் (Santhosh Subramaniam) 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதை தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெனிலியா, கீதா முதலியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொம்மரில்லு தெலுங்குத் திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆக்கம்.

விரைவான உண்மைகள் சந்தோஷ் சுப்பிரமணியம், இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

சந்தோஷ் சுப்பிரமணியம் (ஜெயம் ரவி) ஹாசினியும் (ஜெனிலியா) காதலிக்கின்றனர். சந்தோஷின் தந்தை சுப்பிரமணியம் (பிரகாஷ்ராஜ்) மிகவும் கண்டிப்பானவர் மற்றும் அன்பானவர். தன் மகனைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார். தந்தையின் கெடுபிடிகள் மனதை வருத்தினாலும், அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார். சந்தோஷ் தன் திருமணத்தை தனது விருப்படி செய்துகொள்ளவேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில் ஒரு பெண்ணை சந்தோசுக்கு மணமுடிக்கப் பார்க்கிறார் சுப்பிரமணியம். தன் தந்தையிடம் தன் காதலைச் சொல்லும் சந்தோஷ் தன் காதலியை வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் சிலநாட்கள் வீட்டில் தங்கவைத்தால் அவளை அனைவருக்கும் பிடிக்கும் எனவும் கூறி அழைத்து வருகிறார்.

இதையடுத்து ஹாசினி, சந்தோஷ் வீட்டில் தங்கி அவர்களுடன் பழக வருகிறார். அவரது வெகுளித்தனத்தால் சந்தோசுக்கு பல சிக்கல்கள் நேர்கின்றன. மேலும் ஹாசினியால் சந்தோஷ் வீட்டில் சுதந்திரமாகவும், இயல்பாகவும் இருந்து தாக்குப் பிடிக்க முடியாமல், தன் வீட்டிற்கே திரும்பி விடுகிறார். இதன்பிறகு ஹாசினியும் சந்தோசும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை.

Remove ads

நடிகர்கள்

Remove ads

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "தெலுங்கு 'பொம்மரில்லு', தமிழிலும் செம ஜில்லு! நாயகி யாக ஜெனிலியா, அவருக்குக் குரல் கொடுத்த சவீதா, இசைக்கு தேவி ஸ்ரீபிரசாத் ஆகிய மூவரை யுமே தெலுங்கிலிருந்து அப்படியே கொண்டுவந்ததிலேயே தமிழ் இயக்குநர் ராஜாவுக்குப் பாதி வேலை முடிந்துவிட்டது!... குடும்பத்தோடு பார்க்க முடிகிற, ரசனையான படமாக வந்திருக்கும் விதத்தில் சந்தோஷ் சுப்ரமணியம், இந்த சம்மரின் முதல் சிக்ஸர்." என்று எழுதி 44/100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]

விருதுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads