சமணச் சமூகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமணச் சமூகம் (Jain communities) என்பது சமணச் சமயத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும். இவர்களை ஜெயினர்கள் என்றும் அழைப்பர். இவர்கள் பண்டைய சமணச் சிரமண மரபைப் பின்பற்றுபவர்கள். இச்சமூகத்தவர்களின் வழிகாட்டிகள் தீர்த்தங்கரர்கள் ஆவார். இவர்களின் இரண்டு பிரிவிரினர்களில் ஒருவர் சுவேதாம்பரர், மற்றொரு பிரிவினர் திகம்பரர் ஆவார். தமிழ்நாட்டில், தமிழ் மொழி பேசும் சமணச் சமூத்தவர்களை, தமிழ்ச் சமணர்கள் என்று அழைப்பர். சமணச் சமூகம் இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் வாழ்கிறார்கள். சமணச் சமூகத்தினர், சமணச் சமயக் கொள்கைக்கு இணங்க, சமண சமூகத்தவர்கள் வேளாண்மைத் தொழிலில் மட்டும் ஈடுபடுவதில்லை. மேலும் இச்சமூகத்தினர் மாமிச உணவு உண்பதில்லை. பலர் சூரியன் மறைந்து, இருள் நேரத்தில் உணவு உண்பதில்லை.
Remove ads
சங்கம்
ஜெயின் சமூகத்தில் நால்வகைப் பிரிவினர் உள்ளனர். அவர்களை முனி (ஆண் துறவிகள்), அர்க்கியா அல்லது சாத்வி எனும் பெண் துறவிகள், சிரமணர்கள் (சமணத்தைப் பின்பற்றும் ஆண்கள்) மற்றும் சிராவிகா(சமணத்தைப் பின்பற்றும் பெண்கள்) ஆவார். இந்த வகையினரைச் சங்கம் என்று அழைப்பர்.
மக்கள் தொகை மற்றும் செல்வ நிலை
இந்தியாவில் உள்ள சமயங்களில் அதிகம் எழுத்தறிவு கொண்டவர்களில் சமணர்களே ஆவார். 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சமண சமூகத்தவர்களின் எழுத்தறிவு 94.1% ஆகும். அதே நேரத்தில் இந்திய சராசரி எழுத்தறிவு 65.38% ஆகும். சமணச் சமூகப் பெண்களின் எழுத்தறிவு 90.6.%, அதே நேரத்தில் தேசிய அளவில் பெண்களின் சராசரி எழுத்தறிவு 54.16% ஆகும்.[1][2]
2018ஆம் ஆண்டின் தேசியக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மற்ற சமய சமூகத்திரை விட, ஜெயின் சமூகத்தவர்களில் 70% செல்வத்தின் உச்சத்தில் வாழ்கின்றனர்.[3]
Remove ads
சமணச் சமூக பிரிவுகள்
இந்தியாவில், பெரும்பாலான பகுதிகளில் சமணர்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் சமணர்களில் 100 வகையான சமூகப் பெயர்களில் வாழ்கின்றனர். எடுத்துக்காட்டு: தமிழ்நாட்டில், தமிழ் மொழி பேசும் தமிழ்ச் சமணர்கள் வாழ்கிறார்கள். சமணச் சமூகத்தவர்களை வரலாற்று மற்றும் தற்கால வாழ்விடங்களை அடிப்படையாகக் கொண்டு ஐந்து பிரிவாக பிரிக்கப்படுகின்றனர்.
மத்திய இந்தியா
- புந்தேல்கண்ட் பிரதேச ஜெயின்
- மத்தியப் பிரதேச ஜெயின்
மேற்கு இந்தியா
- இராஜஸ்தான் ஜெயின் (மார்வாடி ஜெயின்)
- குஜராத்தி ஜெயின்
- மராத்தி ஜெயின்
- மும்பை ஜெயின்
வட இந்தியா
- தில்லி ஜெயின்
- உத்தரப் பிரதேச ஜெயின்
தென்னிந்தியா
- கர்நாடக ஜெயின்
- வட கர்நாடகா ஜெயின்
- கேரளா ஜெயின்
- தமிழ் சமணர்கள்
கிழக்கு இந்தியா
- வங்காள ஜெயின்
- நாகாலாந்து ஜெயின்
புலம் பெயர்ந்த ஜெயின்கள்
- ஐரோப்பாவில் புலர்பெயர்ந்த ஜெயின்கள்
- கனடாவில் புலம்பெயர்ந்த ஜெயின்கள்
- அமெரிக்க ஐக்கிய நாட்டில் புலம்பெயர்ந்த ஜெயின்கள்
- கிழக்கு ஆப்பிரிக்காவில் புலம்பெயர்ந்த ஜெயின்கள்.(1960களின் துவக்கத்தில் ஜெயின் மக்கள் தொகை 45,000 ஆகும்.[4] இவர்களில் பெரும்பாலோர் ஜாம்நகரைச் சேர்ந்த குஜராத்தி மொழி பேசும் ஹலாரி விசா ஓஸ்வால் ஜெயின் சமூகத்தினர் ஆவார்.[4][5]
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகையில் ஜெயின் சமூகத்தவர்களின் மக்கள் தொகை 0.54%. (4,451,75) ஆகும். அதில் ஆண்கள் 2,278,097 மற்றும் பெண்கள் 2,173,656)[6]
அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜெயின் மக்கள் தொகை 150,000 முதல் 200,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.[7][8] ஜப்பான் நாட்டில் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமண சமயத்திற்கு மாறியுள்ளதால், அங்கு ஜெயின் சமூகம் வளர்கிறது.[9]
Remove ads
புகழ்பெற்ற ஜெயின் சமூகத்தவர்கள்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads