சமுனாமரத்தூர்

ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகவும் மற்றும் மலை வாசல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சமுனாமரத்தூர் (Jamunamarathoor) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின் சவ்வாது மலையில் இருக்கும் புகழ் பெற்ற ஊராகும். இது ஜவ்வாது மலையின் முக்கிய சந்தைப் பகுதியும், மக்கள் கூடும் இடமும் ஆகும்.

விரைவான உண்மைகள் சமுனாமரத்தூர், நாடு ...
Remove ads

அமைவிடம்

சமுனாமரத்தூர் மாவட்ட தலைமையிடமான திருவண்ணாமலையிலிருந்து 76 கி.மீ. தொலைவிலும், போளூரிலிருந்து 44 கி.மீ. தொலைவிலும், ஆரணியிலிருந்து 68 கி.மீ. தொலைவிலும், செங்கத்திலிருந்து 48 கி.மீ. தொலைவிலும், கலசப்பாக்கத்திலிருந்து 52 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருந்து 83 கி.மீ. தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 53 கி.மீ. தொலைவிலும், வாணியம்பாடியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

நிர்வாகம் மற்றும் அரசியல்

சமுனாமரத்தூர் நகரம் கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகற்கும் உட்பட்டதாகும். இந்த நகரம் கோவிலூர் ஊராட்சியின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

வருவாய் வட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் சமுனாமரத்தூர் வட்டமும் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு போளூர் வட்டத்தின் மேற்குப் பகுதிகளையும், செங்கம் வட்டத்தின் வடக்கு பகுதிகளையும் கொண்டு இந்த வட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வட்டம் 42 வருவாய் கிராமங்களையும், 47,271 மக்கள்தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் சமுனாமரத்தூர் மற்றும் சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இது ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.

Remove ads

சாலை வசதிகள்

சமுனாமரத்தூரில் சாலை வசதிகள் பொறுத்த வரை மலைகளின் நடுவே வலைப் பின்னலாக அமைந்துள்ளது.

ஆகிய முக்கிய சாலைகள் சமுனாமரத்தூர் நகரை இணைக்கிறது.

போக்குவரத்து வசதிகள்

சமுனாமரத்தூர் நகரில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஆலங்காயம், திருப்பத்தூர், போளூர், ஆம்பூர், வாணியம்பாடி, கலசப்பாக்கம் ஆகிய நகரங்களில் இருந்து நேரடியாக பேருந்து சேவைகள் உள்ளன.

மக்கள் தொகை

2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 6,000 மக்கள் வாழ்கிறார்கள். இது சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையகம் ஆகும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads