சமோசா

தீனி From Wikipedia, the free encyclopedia

சமோசா
Remove ads

சமோசா (Samosa; ஐபிஏ :/səˈmsə/) அல்லது சம்சா என்ற திண்பண்டமானது, பல்வேறு நாடுகளின் மக்களால் விரும்பப்படும் நொறுக்குத்தீனியாகவும், தொடுகறியாகவும், பசி/சுவையூக்கியாகவும் திகழ்கிறது. இந்த உணவு செய்முறை வடிவில், வேறுபட்டு இருந்தாலும், மூன்று முக முக்கோண வடிவமே, பன்னாட்டினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களிலுள்ள பல்வேறு நாட்டினரும், இதனை சிற்றுண்டியாக உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, அராபியத் தீபகற்பம், தென்கிழக்காசியா, தென்மேற்கு ஆசியா, நடுநிலக் கடல், இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்காவின் கொம்பு, கிழக்கு ஆபிரிக்கா, வடக்கு ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் உணவுப் பட்டியலில், இப்பண்டம் அடங்கி உள்ளது. பல நாடுகளின் கலாச்சார வேறுபாடுகளாலும், அம்மக்களின் குடிபெயர்வாலும், இத்தீனி பல நாடுகளிலும் பரவி வருகிறது.

விரைவான உண்மைகள் மாற்றுப் பெயர்கள், வகை ...
Thumb
பச்சைமாவு சமோசா (உயர் ரக வகை சமோசா)
Thumb
வெந்தமாவு சம்சா (மலிவு ரக வகை சம்சா)


  • மேலும் தமிழகத்தில் இரண்டு வகையில் சம்சா தயாரிக்கப்படுகிறது.
  • அவை பச்சை மைதா மாவு சமோசா என்பது பட்டாணி அல்லது சுண்டல் (வெள்ளை கொண்டகடலை) உடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை உள்ளடக்கி எண்ணெயில் குறைந்த வேகாட்டில் உப்பலாக பெரியளவில் பொறித்தெடுத்து செய்யபடும் உயர் ரக வகையை "சமோசா" அல்லது "கார சோமோசா" என்று அழைக்கபடுகிறது.
  • அதே போல் வெந்த மைதா மாவு சம்சா என்பது பட்டாணி, உருளைக்கிழங்கு அல்லது சாதாரணமாக வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை உள்ளடக்கி எண்ணெயில் அதிக வேகாட்டில் பொறித்தெடுத்து சிறியளவில் செய்யபடும் மலிவு ரக வகையை "சம்சா" என்று அழைக்கப்படுகிறது.
Remove ads

சொற்தோற்றம்

Remove ads

தேவையான பொருட்கள்

உலக மக்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கு ஏற்ப, இதன் அளவும், உட்பொருட்களின் கலப்பும், வேறுபடுகின்றன. தேவையான பொருட்களை, இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வெளிப்புறத்திற்கான, மாவு. இது பெரும்பாலும், மைதா மாவாகும். இரண்டாவது உட்பொருளான மசாலைச் சேர்வை. இது உள்ளிடு பொருள் என்றும், பூர்ணம் என்றும் அழைக்கப்படும். பூர்ணமாக, உருளைக்கிழங்குவெங்காயம்பட்டாணி, முட்டைக்கோசு, கேரட் போன்ற காய்கறிகளும், உண் உணவாக மாட்டிறைச்சியும், கோழிக் கறியும் சிறுசிறு துண்டுகளாகவும் தேர்ந்தெடுக்கப் படுகிறது. இத்துடன் நறுமண உணவுப் பொருட்களாலான மஞ்சள், இலவங்கம், பட்டை, பெருஞ்சீரகம், உப்பு போன்றவை பதமாகக் கலக்கப் படுகிறது. இந்திய சமோசாவில், மரக்கறி உட்பொருளே அதிகம் பயன்படுகிறது.

Remove ads

செய்முறை

Thumb
வேகவைத்த பெரிய ரொட்டி தயாரிப்பு
Thumb
நீள்செவ்வக வடிவமும், இறுதி வடிவமும்

செய்முறை அடிப்படையில், இதனை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பச்சைமாவு சமோசா, மற்றொன்று வெந்தமாவு சமோசா. பச்சைமாவு சமோசா என்பது குறைந்த நேரத்தில் உடனே தயாரிக்கப்படும், துரித உணவு தயாரிப்பு முறையாகும். இதில் பயன்படுத்தம் எண்ணெயின் அளவு குறைவாக இருக்கும். தோசைசட்டியில் இதனைத் தயாரிக்கலாம். நுண்ணலை அடுப்பு போன்றவற்றிலும் தயாரிக்கலாம். வெந்தமாவு சமோசா என்பது இரு நாட்களில் செய்யப்படும். இட்லி மாவு தயாரிப்பது போல, முதல் நாளே பாதி செய்முறை முடிந்து விடும். இதனால் வெந்தமாவு சமோசாவில் சற்று புளிப்புச் சுவை இருக்கும். மேலும், முழுமையாக கொதிக்கும் சமையல் எண்ணெயில், அமிழ்ந்து எடுப்பதால் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும்,உட்புறம், வேகவைத்த காய்கறி போன்று, திண்மையாக இருக்கும். மேற்கூறிய இரண்டு முறைகளிலும், மைதாவில் ஆனா மெல்லிய உரொட்டி/சப்பாத்தி போன்று, பெரியதாகத் தயாரிக்கப் படுகிறது. இந்த ரொட்டி நீள்செவ்வக வடிவில் வெட்டப் படுகிறது. ஒவ்வொரு நீள்செவ்வக ரொட்டியும், ஏறத்தாழ நமது பணத்தாள் போன்ற வடிவம் பெறுகிறது. இவ்வடிவம் கொண்ட ரொட்டி, முக்கோண வடிவில் கையால் சுற்றப்பட்டு, அதனுள் உள்ளிட்டுச்சேர்வை வைத்து, மைதா பசையால் ஒட்டப்படுகிறது. இவ்வாறு நிரப்பப் பட்ட சமோசாவை வேகவைத்து எடுத்தால், அது உண்ணும் பக்குவத்திற்கு மாறும்.

காட்சியகம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads