சப்பாத்தி

From Wikipedia, the free encyclopedia

சப்பாத்தி
Remove ads

சப்பாத்தி (Chapati) எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு பொதுவான இந்திய உணவாகும். சப்பாத்தி தெற்கு ஆசியா, கரீபியன் தீவுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் இந்திய வியாபாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் மெலிதாகத் தேய்த்து பின்னர் தோசைக் கல்லின் மீது வைக்கப்பட்டு நெருப்பில் சூடுபடுத்தித் தயாரிக்கப்படுகிறது. இது மாலத்தீவுகளில் ரொசி என்றழைக்கப்படுகிறது.[2]

Thumb
சப்பாத்தி செய்யும் ஒரு இந்தியப் பெண்
Thumb
சப்பாத்தி
Remove ads

வரலாறு

சப்பாத் (ஹிந்தி:चपत, chapat) என்பதன் ஹிந்தி அர்த்தம் "தட்டை", இது இரு உள்ளங்கைகளுக்கிடையே பிசைந்த மாவினை வைத்து அறைந்து, வட்டவடிவிலான தட்டையாக மாவினை உருவாக்கும் வழமையான முறையைக் கூறிக்கிறது. ஒவ்வொரு அறைக்கும் வட்டவடிவிலான அறைந்த மாவு சுற்றப்படுகின்றது. சப்பாத்தி பற்றி 16-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த அபுல் ஃபசல் எழுதிய அயினி அக்பரி மற்றும் முகலாய பேரரசர் அக்பரின் அமைச்சர் குறிப்புகளிலும் இருக்கிறது.[3]

இந்திய துணைக் கண்டத்தில் பிரதான உணவாக இருக்கும் கோதுமையில் செய்யப்படும் உணவுகளில் மிகவும் பொதுவானதாக சப்பாத்தி உள்ளது. மொகெஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கார்பனேற்றப்பட்ட கோதுமை தானியங்கள் இன்றும் இந்தியாவில் காணப்படுகின்ற ஒரு கோதுமை இனத்திற்கு ஒத்ததாக உள்ளது. சிந்து வெளி நாகரிக பகுதிகள் பயிரிடப்பட்ட கோதுமையின் மூதாதையர் நிலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. சப்பாத்தி என்பது ரோட்டி அல்லது ரோட்டா (ரொட்டி) போன்ற சொற்களால் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சப்பாத்தி மற்றும் ரோட்டி போன்ற உணவு வகைகள் இந்திய வியாபாரிகளின் மூலமாக தென்கிழக்கு ஆசியா மற்றும் கரீபியன் தீவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.[1]

Remove ads

செய்முறை

கோதுமை மாவுடன் நீர் மற்றும் உப்பு சேர்த்து கையால் பிசைந்து சப்பாத்தி மாவு தயாரிக்கப்படுகிறது.[4] சில நேரங்களில், சப்பாத்திமாவு மற்றும் சோறு(அரிசி) தயாரிக்கும்போது உப்பு சேர்ப்பதில்லை. ஏனெனில் காரமான பக்க உணவிற்கு ஏற்ப இவ்வாறு செய்வதுண்டு.[5]

சப்பாத்தி மாவு பிசைந்தவுடன், இக் கலவை 10 அல்லது 15 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை கலனில் வைத்து ஊற வைப்பதுண்டு. இதனால் மாவு மிருதுத் தன்மையுடன் இருக்கிறது. பின்னர் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி செய்வதற்கு பயன்படும் பலகை அல்லது இரு உள்ளங்கைகளை பயன்படுத்தி ஒவ்வொரு உருண்டையையும் சிறிது மாவில் தோய்த்து வட்ட வடிவமாக செய்து கொள்வர்.[6] தற்போது இவை அனைத்தையும் செய்வதற்கு எந்திரங்கள் வந்துவிட்டன.

வட்ட வடிவமாக செய்த சப்பாத்திகள் சூடான தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் நன்றாக வேகவைக்கப்படுகின்றன. சில பகுதிகளில், சப்பாத்தி ஒரு பகுதி வெந்ததும் எடுத்து எரியும் தணலில் போடப்படுகிறது. இதனால் சப்பாத்தி உப்பலாகவும் அதிக மிருதுத்தன்மையுடனும் உள்ளது. இந்த செய்முறை வட இந்தியா மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் "பூஃல்கா" எனப்படுகிறது. தென்னிந்தியாவில் "புல்கா" என்ப்படுகிறது. தோசைக்கல்லில் சப்பாத்தியை வாட்டி எடுக்கும்போதும் உப்பலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.[5][7] சப்பாத்தி செய்தவுடன் அதன் மேல் வெண்ணெய் அல்லது நெய் தடவி வைக்கப்படுகின்றன.[8] மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்குப் பகுதியில் சப்பாத்தி மாவு உருண்டைகளில் சிறிது எண்ணெய் சேர்த்து, மீண்டும் உருட்டி வட்ட வடிவமாகச் செய்து பின்னர் சூடான தோசைக்கல்லில் போடப்படுகிறது. இது பராத்தா எனப்படுகிறது.

Remove ads

சப்பாத்தியின் வகைகள்

இந்திய மாநிலங்களில் பலவகை சப்பாத்திகள் செய்யப்படுகின்றன. அவற்றில் சில வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பன்னீர் சப்பாத்தி: கோதுமை மாவுடன் துருவிய பன்னீர் துண்டுகள் சேர்த்து செய்யப்படும் சப்பாத்தி பன்னீர் சப்பாத்தி எனப்படுகிறது. மேலும் இது 'பன்னீர் பராத்தா' எனவும் சொல்லப்படுகிறது.

முள்ளங்கி சப்பாத்தி: கோதுமை மாவில் துருவிய முள்ளங்கி மஞ்சள் (மூலிகை) தூள் கலந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி பொதுவாக மெலிதாக இல்லாமல் சற்று அடர்த்தியாக இருக்கும். இது தொலை தூரம் பயணிக்கும் லாரி ஓட்டுநர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. தெருவோரக் கடைகளில் இது பிரபலமாக உள்ளது. இது "மூலி பராத்தா" எனவும் அழைக்கப்படுகிறது.

வெஜிடபிள் சப்பாத்தி: இது மசித்த கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, வெந்தயம் மற்றும் சில காய்கறிகள் சேர்த்து சமைத்த மசாலா கலவையினை தேவையான அளவில் சப்பாத்தி மாவில் வைத்து செய்யப்படுவதாகும். இது பொதுவாக உருளை வடிவில் பரிமாறப்படுகிறது. பல குடும்பங்களில் வீட்டில் இருக்கும் காய்கறிகளைக் கொண்டு இந்த சப்பாத்தி தயாரிக்கப்படுகிறது.

ஆலு பராத்தா: இந்த வகை சப்பாத்தி வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. வட இந்திய பகுதிகளான புது தில்லி, பஞ்சாப் மற்றும் சிம்லாவின் மலைப்பகுதிகளில் இந்த உணவு பிரபலமாக உள்ளது. இதனுடன் ஊறுகாய் மற்றும் தயிர் சேர்த்து உண்ணும் முறை வழக்கமாக உள்ளது. மேலும், குளிர் காலங்களில், காலி பிஃளவர் சேர்த்து தயாரிக்கும் "கோபி பராத்தா" வும், முள்ளங்கி சேர்த்து தயாரிக்கப்படும் "மூலி பராத்தா"வும் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள்

விரைவான உண்மைகள் கார்போவைதரேட்டு, சீனி ...
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads