சராணி முகமது
மலேசியா, பேராக் மாநிலத்தின் 14-ஆவது பேராக் மந்திரி பெசார் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டத்தோ ஸ்ரீ சராணி முகமது (ஆங்கிலம்; மலாய்: Saarani bin Mohamad; சீனம்: 萨拉尼·本·穆罕默德; சாவி: حاج سعرغني بن محمد ; (பிறப்பு: 14 மார்ச் 1962) என்பவர்; 2020 டிசம்பர் மாதம் தொடங்கி மலேசியா, பேராக் மாநிலத்தின் 14-ஆவது பேராக் மந்திரி பெசாராக பதவி வகிக்கின்றார். மார்ச் 2004 முதல் கோத்தா தம்பான் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் சேவை செய்து வருகிறார்.[1]
பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணியின் முன்னாள் பேராக் மந்திரி பெசார் தாஜோல் ரோசுலி முகமது கசாலி (Tajol Rosli Mohd Ghazali) மற்றும் சாம்ரி அப்துல் காதர் (Zambry Abdul Kadir) ஆகியோரின் மாநில நிர்வாகங்களில், பேராக் மாநில ஆட்சிக்குழு (Perak State Executive Council - EXCO) உறுப்பினராக சராணி முகமது பணியாற்றியுள்ளார்.[2]
Remove ads
பேராக் மாநில பாரிசான் நேசனல் தலைவர்
பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional - PN) மாநில நிர்வாகத்தின் முன்னாள் பேராக் மந்திரி பெசார் அகமத் பைசல் அசுமுவின் (Ahmad Faizal Azumu) கீழ் மார்ச் 2020 முதல் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் டிசம்பர் 2020-இல் பெரிக்காத்தான் நேசனல் நிர்வாகம் வீழ்ச்சி அடையும் வரையில் பேராக் மாநில செயற்குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
ஆகஸ்டு 2018 முதல் மார்ச் 2020 வரை பேராக் மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும்; நவம்பர் 1999 முதல் மார்ச் 2004 வரை லெங்கோங் சட்டமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றி உள்ளார்.
லெங்கோங் மக்களவை தொகுதி
இவர் தேசிய முன்னணி கூட்டணியின் மூத்த கட்சியான அம்னோவின் உச்ச மன்ற உறுப்பினராகவும்; லெங்கோங் மக்களவை தொகுதியின் (Lenggong Federal Constituency) தலைவராகவும்; லெங்கோங் அம்னோ பிரிவின் தலைவராகவும்; பேராக் மாநிலத்தின் பாரிசான் நேசனல் தலைவராகவும்; பேராக் மாநில அம்னோ பிரிவின் தலைவராகவும் உள்ளார்.[3]
Remove ads
விருதுகள்
மலேசிய விருதுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads