சாக்லேட் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாக்லேட் என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 16, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பான சமையல் மற்றும் காதல் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் இதே பெயரில் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மலையாள மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் சாக்லேட், வகை ...

இந்த தொடரில் கதாநாயகனாக நந்தினி தொடர் புகழ் ராகுல் ரவி என்பவர் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்திலும் இவருக்கு ஜோடியாக இனியா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஷாமிலி நடித்துள்ளார்கள். இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் 31 மார்ச்சு 2020 முதல் 84 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டது.

Remove ads

கதை சுருக்கம்

இந்த தொடரின் கதை இனிப்பு தொழிலை தனது உயிராகவும் விருப்பத்துடனும் செய்யும் மான்நிற கதாநாயகி. இன்னொரு பக்கம் தொழிலை தொழிலாக மட்டும் பார்க்கும் கதாநாயகனும் ஒன்றாக வேலை செய்தால் என்னவாகும் என்பதுதான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • ராகுல் ரவி - விக்ரம்
  • ஷாமிலி - இனியா விக்ரம்
  • வந்தனா பிருந்தா - பல்லவி

இனியா குடும்பத்தினர்

  • சதீஷ் - வாசுதேவன்
  • காயத்ரி பிரியா - சிவகாமி வாசுதேவன்
  • ரித்திகா - அமிர்தா

விக்ரம் குடும்பத்தினர்

  • அபிஷேக் சங்கர் - சஞ்சய் குமார்
  • மாமிலா ஷைலஜா பிரியா - ரேணுகா சஞ்சய் குமார்
  • அக்ஷிதா அசோக் - வைஷாலி
  • ரவிக்குமார் - நாராயணன்
  • ஸ்வப்னா - ரம்யா ரமேஷ்
  • மோசஸ் - ரமேஷ்
  • விக்னேஷ் ரெட்டி - ராகுல்

நடிகர்களின் தேர்வு

இது ஒரு மறு தயாரிப்பு தொடர் ஆகும் இந்த தொடரில் ராகுல் ரவி என்பவர் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் ராகுல் ரவி நடித்துள்ளார். இது இவரின் இரண்டாவது தமிழ் தொடர் ஆகும். இதற்க்கு முதல் நந்தினி என்ற வெற்றி தொடரில் கதாநாயகனான நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாள பதிப்பிலும் இதே கதாபாத்திரத்தில் நடித்தார்,[2] அந்த தொடரிலிருந்து விலகி தமிழ் தொடரில் நடிக்கின்றார். இதனால் மலையாளிகள் மத்தியில் இவருக்கு சில எதிர்ப்புகள் வலைத்தளங்களில் உருவானது.

இனியா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஷாமிலி நடித்துள்ளார். இவர் இதற்க்கு முன் கன்னட தொடர்களில் நடித்துள்ளார். இவரின் தாய் காதாபாத்திரத்தில் காயத்ரி பிரியா நடிக்கின்றார். மலையாளப்ப பதிப்பிலும் இவரே தாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தை கதாபாத்திரத்தில் சதிஷ் நடித்துள்ளார் இவர் ஆனந்தம், அத்திப்பூக்கள் போன்ற பல தமிழ் தொடர்களில் நடித்துள்ளார்கள்.

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மிகக் குறைந்த மதிப்பீடுகள் ...

சர்வதேச ஒளிபரப்பு

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads