சாங்சூங் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாங்சூங் இராச்சியம் (Zhangzhung or Shangshung) தற்கால திபெத் பகுதியின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளைக் கொண்டு, கிமு 500 முதல் கிபி 625 முடிய ஆட்சி செய்த முடியாட்சி ஆகும். இந்த இராச்சியத்தினர் போன் பௌத்த சமயத்தைப் பின்பற்றினர். பின்னர் திபெத்திய பௌத்தத்தைப் பின்பற்றினர். திபெத்திய பௌத்த சாத்திரங்களில் திபெத்தின் நடுப்பகுதி மற்றும் மேற்குப் பகுதிகளை சாங்சூங் இராச்சியத்தினர் ஆண்டதாக குறிப்புகள் உள்ளது. கிபி 625-ஆம் ஆண்டில் சாங்சூங் இராச்சியம் திபெத்தியப் பேரர்சின் கீழ் சென்றது.தற்போது சாங்சூங் இராச்சியத்தின் பகுதிகள் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியாகவும் மற்றும் இந்தியா மற்றும் நேபாளத்தின் பகுதிகளாகவும் உள்ளது.

அன்மைய அகழ்வாய்வுகளின் படி, இரும்புக் காலத்தில் வடமேற்கு திபெத்தின் சாங்டாங் சமவெளியில் சாங்சூங் இராச்சியம் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது.
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads