சாணக்கியன் இராசமாணிக்கம்
இலங்கை தமிழ் அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாணக்கியன் ராகுல் ராசபுத்திரன் இராசமாணிக்கம் (Shanakiyan Ragul Rajaputhiran Rasamanickam, பிறப்பு: 20 செப்டம்பர் 1990) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
சாணக்கியன் 1990 செப்டம்பர் 20 இல் பிறந்தார்.[1] இவர் முன்னாள் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சி. மூ. இராசமாணிக்கத்தின் பேரன் ஆவார்.[2][3] இவர் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[3]
அரசியல் வாழ்க்கை
இவர் முன்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளராக இருந்தவர்.[4][5] இவர் ராசபக்ச ஆட்சியின் ஆதரவாளராகவும், துணை இராணுவக் குழுத் தலைவர் பிள்ளையானின் ஆதரவாளராகவும் செயல்பட்டவர்.[4] இவர் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[2]
சாணக்கியன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[6][7] இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[8][9][10] 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 65,458 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
Remove ads
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads