வடக்கு சத்திரபதிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு சத்ரபதிகள் அல்லது மதுராவின் சத்திரபதிகள் (Northern Satraps , or Satraps of Mathura)[1] இந்தோ=சிதியர்கள் வட இந்தியாவை ஆண்ட இந்தோ கிரேக்கர்களையும் மற்றும் மதுராவின் உள்ளூர் மன்னர்களையும் வீழ்த்தி, கிழக்கு பஞ்சாப் முதல் மதுரா வரை கிமு 60 முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட வடக்கு சத்திரபதிகள் ஆவார். வடக்கு சத்திரபதிகள் சகலா மற்றும் மதுரா நகரங்களை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
மேற்கு இந்தியப் பகுதிகளை ஆண்ட மேற்கு சத்திரபதிகளும், வடக்கு சத்திரபதிகளும் சமகாலத்தவர்களே. வடக்கு சத்திரபதிகள் பௌத்தம், சமண மற்றும் இந்து சமயங்களையும் ஆதரித்ததுடன், பல நினைவுச் சின்னங்களை எழுப்பியும், தங்களது உருவம் பொறித்த நாணயங்களைய்ம் வெளியிட்டனர்.
பின்னர் மதுராவை தலைநகராகக் கொண்டு ஆண்ட குசானப் பேரரசர் வீம கட்பீசஸ் மற்றும் கனிஷ்கர் ஆட்சிக்காலத்தில், வடக்கு சத்திரபதிகள் வெல்லப்பட்டு, குசானப் பேரரசில் சத்திரபதிகள் எனும் மாகாண ஆளுநர்களாக பணிபுரிந்தனர். எனவே வரலாற்று ஆசிரியர்கள், வட இந்தியாவை ஆண்ட இந்தோ-சிதியர்களுக்கு வடக்கு சத்திரபதிகள் எனப்பெயரிட்டனர்.



Remove ads
மதுராவின் சிங்கத் தூண்
வடக்கு சத்திரபதிகளின் மன்னர் நிறுவிய மணற்கல் மதுரா சிங்கத் தூண் மதுராவில் 1869ம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. [4] இச்சிங்கத்தூணில் பிராகிருதத்தின் கரோஷ்டி எழுத்துமுறையில் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.[5] [6]
இந்தோ சிதியர்களின் வடக்கு சத்திரபதி மன்னர் முகி என்பவரின் நினைவாக இச்சிங்கத் தூண் நிறுவப்பட்டதாகும். இச்சிங்கத் தூணில் இந்தோ சிதிய மன்னர்களின் வழித்தோன்றல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. [7]
இச்சிங்க தூணில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகள், மகாசம்ஹிகா புத்தப் பிரிவை எதிர்க்கும் சர்வாஸ்திவாத பௌத்தத்தை இந்தோ சிதிய மன்னர்கள் ஆதரித்தாக குறிப்பிடுகிறது. [8]தற்போது இச்சிங்கத் தூண் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.
Remove ads
இந்து சிற்பங்கள்
யட்சினி சிற்பம்
- யட்சினிகளின் சிற்பம், காலம் கிமு 20
- யட்சினிகளின் சிற்பம், காலம் கிமு 20
- யட்சினிகளின் சிற்பம், காலம் கிமு 20
மோரா சிற்பங்கள் (கிபி 15)
பெரும் சத்திரபதி சோடசாவின் மோரா மோரா சிற்பங்கள் (கிபி 15), விருஷ்ணி குல நாயகர்களின் கோயில் கதவுகளைத் தாங்கும் வேலைப்பாடுகளுடன் கூடிய மரத் தூண்கள்[10] இடது: விருஷ்ணி குல நாயகனின் உடற்பகுதி சிற்பம், கிபி:15[11][12][13][14] வலது: விருஷ்ணி குல நாயகர்களின் கோயில் கதவுகளைத் தாங்கும் வேலைப்பாடுகளுடன் கூடிய மரத் தூண்கள்[15]
Remove ads
சமண நினைவுச் சின்னங்கள்
- சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் ரிசபதேவர் சிற்பம், கிபி முதல் நூற்றாண்டு
- சமணத்தின் 7வது தீர்த்தங்கரர் சுபர்சுவநாதர் மற்றும் மூவர், கிபி முதல் நூற்றாண்டுச் சிற்பம்
- ஆட்டுத் தலை கொண்ட சமண தேவதை சிற்பம், கிபி முதல் நூற்றாண்டு
சமண நினைவுச் சின்னங்கள்
மன்னர் சோடசாவின் கங்காளி திலா கற்பலகை சிற்பம்
மகாசத்திரபதி சோடசா காலத்தில் (கிபி:15) கங்காளி சமண அமோகினி திலா கற்பலகை மற்றும் சமண சமய சிற்பங்கள் மற்றும் சிற்பத்தூண்கள் மதுராவின் சமணக் கோயில்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.[16] [17]
- சமண தூபி, கிபி முதல் நூற்றாண்டு, மதுரா.[22]
- சமணத்தின் அர்த்தபாலகா பிரிவு துறவிகளின் சிற்பப் பலகை, கிபி முதல் நூற்றாண்டு[23]
- மோரா கிணறு கல்வெட்டுகள், மதுரா, கிபி 15[15]
வனப்பெழுத்துகள் (கிமு முதலாம் நூற்றாண்டின் முடிவிலும் - கிபி முதலாம் நூற்றாண்டிலும்)














Svāmisya Mahakṣatrapasya Śudasasya
"Of the Lord and Great Satrap Śudāsa"[32][33]
இந்தோ சிதியர்களான மேற்கு சத்திரபதி மன்னர்கள் (கிமு முதலாம் நூற்றாண்டின் முடிவிலும், கிபி முதலாம் நூற்றாண்டிலும், வட இந்தியாவில் வனப்பெழுத்தில் பிராமி எழுத்துகள் கல்வெட்டுகளில் எழுதும் வழக்கம் கொண்டிருந்தனர். [31]
கௌதம புத்தரின் முதல் சிற்பம் (கிபி 15 முதல்)

சாஞ்சி மற்றும் பர்குட் போன்ற இடங்களில் காணப்படாத கௌதம புத்தரின் முதல் சிற்பத்தை, மேற்கு சத்திரபதிகள் கிபி 15-இல் மதுராவில் வடித்தனர்.
பிற சிற்பங்கள்


ராஜகிரகம் அருகே இந்திரசீல குகையில் இந்திரன், கௌதம புத்தரை வணங்கும் சிற்பங்களையும், போதி மரத்தடி புத்தரின் பல சிற்பங்களையும் வடக்கு சத்திரபதி மன்னர்கள் கிபி 50 - 100 காலத்தில் நிறுவினர்.[16]
Remove ads
இந்து தேவதைகளின் சிற்பங்கள்

வடக்கு சத்திரபதிகளின் ஆட்சியின் துவக்கத்தில் மதுராவில் விருஷ்ணி குலத் தலைவர்களின் சிற்பங்கள், யட்சர்கள் மற்றும் யட்சினிகளின் சிற்பங்களை வடிக்கப்பட்டது.[36] வேத கால கடவுளர்களான இந்திரன், பிரம்மா, சூரியன், மித்திரன் போன்றவர்கள், கௌதம புத்தருடன் தொடர்புருத்தி இந்திரசீல குகையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது[36] T
Remove ads
வடக்கு சத்திரபதி ஆட்சியாளர்கள்
Remove ads
இதனையும் காண்க
வடக்கு சத்திரபதிகள் வெளியிட்ட நாணயங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads