சாம்சூன் மாகாணம்
துருக்கியின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாம்சூன் மாகாணம் (Samsun Province, துருக்கியம்: Samsun ili ) 1,252,693 (2010) என்பது கருங்கடல் கடற்கரையில் உள்ள ஒரு துருக்கி மாகாணமாகும் . இது 1,252,693 (2010) மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இதன் அருகில் உள்ள மாகாணங்களாக வடமேற்கில் சினோப், மேற்கில் கோரம், தெற்கில் அமஸ்யா, கிழக்கில், தென்கிழக்கில் டோகாட் ஆகியவை உள்ளன. இதன் போக்குவரத்துக் குறியீடு 55 ஆகும்.
மாகாண தலைநகராக சம்சூங் நகரம் உள்ளது. இது துருக்கியின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும்.
Remove ads
நிலவியல்
ஏரிகள்
மாகாணத்தில் லடிக் ஏரி, அகல், டுமன்லே ஏரி, செமென்லிக் ஏரி போன்ற ஏரிகள் உள்ளன.
ஆறுகள்
மகாணத்தில் கோசலர்மக், யெசிலர்மக், டெர்ம் நதி, அப்டல் சுயு, மெர்ட் இர்மா, கோர்டான் சுயு போன்ற ஆறுகள் பாய்கின்றன.[2]
மாவட்டங்கள்
சம்சுங் மாகாணமானது 17 மாவட்டங்களக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு சாம்சூன் நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன (தடித்த எழுத்துகளில் சுட்டபட்டுள்ளது).
- அல்கடம்
- கனிக்
- அட்டகம்
- டெக்கேகாய்
- அலசம்
- அசர்காக்
- அய்வாசக்
- பாஃப்ரா
- கார்சம்பா
- ஹவ்ஸா
- காவக்
- லடிக்
- ஒன்டோகுஸ்மாயஸ்
- சலபசரா
- டெர்ம்
- விசிர்கோப்ரு
- யாககென்ட்
வரலாறு
மாகாணத்தில் அறுவைசிகிச்சை கருவிகள் தயாரிக்கப்படுகின்றன, அவை 4000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தன.[3] துருக்கிய குடியரசின் நிறுவனர் முஸ்தபா கெமல் அடாடர்க், துருக்கிய சுதந்திரப் போரை 1919 மே 19 அன்று இங்குதான் தொடங்கினார்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads