சினோப் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சினோப் மாகாணம் (Sinop Province, துருக்கியம்: Sinop ili ; கிரேக்கம்: Σινώπη , சினோபி ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும். இது கருங்கடலை ஒட்டி உள்ளது. இது 41 முதல் 42 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 34 முதல் 35 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை இடையே அமைந்துள்ளது. இதன் பரப்பு 5,862 கி.மீ. 2 ஆகும். இது துருக்கியின் மொத்த பரப்பளவில் 0.8% உள்ளது மாகாணத்தின். எல்லையானது மொத்தம் 475 கி.மீ. ஆகும். இதில் கடலோரப் பகுதி 300 கி.மீ நீளம், தரைப்பகுதி 175 கி.மீ. நீளம் கொண்டது. இதன் எல்லைகளாக மேற்கே கஸ்டமோனு, தெற்கே கோரம், தென்கிழக்கே சாம்சூன் போன்ற மாகாணங்கள் உள்ளன. மாகாண தலைநகராக சினோப் நகரம் உள்ளது.
Remove ads
நிலவியல்
ஆறுகள்
மகாணத்தில் கோசலர்மக், கோகர்மக், சர்சக் çay, கராசு, அயன்காக் சுயு, டெப்சே, சாகரோஸ்லு, கன்லடெரே ஆகிய ஆறுகள் பாய்கின்றன.[2]
ஏரிகள்
மாகாணத்தின் ஸ்லாக்லே, சரகும் ஆகிய ஏரிகள் உள்ளன.
விரிகுடாக்கள்
மாகாணத்தில் ஹாம்சிலோஸ் விரிகுடா உள்ளது.
மாவட்டங்கள்
சினோப் மாகாணம் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):
- அயன்காக்
- பாயாபத்
- டிக்மென்
- துராசன்
- எர்ஃபெலெக்
- ஜெர்ஸ்
- சாராய்தா
- சினோப்
- டர்கெலி
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads