சிபி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிபி மாவட்டம் (Sibi), பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ளது. [3]இதன் நிர்வாகத் தலைமையிடம் சிபி நகரம் ஆகும். 2002ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு அர்மாய் மாவட்டம் நிறுவப்பட்டது.
Remove ads
தட்ப வெப்பம்
சிபி மாவட்டம் பாகிஸ்தானில் மிகவும் வெப்பம் கொண்டது. கோடைக்காலத்தின் இம்மாவட்டத்தின் வெப்பம் 52.6 °C (126.7 °F) வரை செல்லும்.
மக்கள் தொகை பரம்பல்
2023ஆம் ஆண்டின் பாகிஸ்தான் மக்கள தொகை கணக்கெடுப்பின்படி 7121 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிபி மாவட்டத்தில் 31,296 குடியிருப்புகளும் மற்றும் மக்கள் தொகை 2,24,148 ஆக உள்ளது. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 105.43 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 47.41%: ஆகும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 69,300 (30.92%) ஆக உள்ளனர். இம்மாவட்டடத்தின் 69,300 (30.92%) மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் 97.57%, இந்து சமயத்தினர் 1.9%, கிறித்தவர்கள் 0.51% மற்றும் பிறர் 0.02% ஆக உள்ளனர்.:[4]
மொழிகள்
இம்மாவட்டத்தில் சிந்தி மொழி 44.15%, பலூச்சி மொழி 23.5%, பஷ்தூ மொழி 13.4% சராய்கி மொழி 13.36%, பிராகுயி மொழி 2.91% மற்றம் பிற மொழி பேசுபவர்கள் 2.68% ஆக உள்ளனர்.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் சிபி வட்டம், குத்மாந்தய் வட்டம், சங்கன் வட்டம், லெகிரி வட்டம் என நான்கு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
போக்குவரத்து
இரயில் போக்குவரத்து
சிபி தொடருந்து நிலையம்[5] இருப்புப்பாதை மூலம் நாட்டின் இராவல்பிண்டி, , இஸ்லாமாபாத், பெசாவர் போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜாபர் எக்ஸ்பிரஸ் மாகாணத் தலைநகரான குவெட்டா முதல் சிபி மாவட்டம் வழியாக, நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத் மற்றும் பெசாவர் வரை இணைக்கிறது.
2025 இயாஃபர் தொடருந்து கடத்தல்
பலுசிஸ்தான் விடுதலைப்படையினர் 11 மார்ச் 2025 அன்று சிபி மாவட்டத்தின் மலைப்பகுதியில் தண்டவாளத்தை வெடிகுண்டுகள் வைத்து தகர்த்து, குவெட்டாவிலிருந்து, பசாவரை நோக்கிச் சென்ற ஜாபர் விரைவு வண்டியை கைப்பற்றி, இரயிலில் பயணித்த பாகிஸ்தான் இராணுவத்தினர், துணை காவல் படையினர் மற்றும் உளவு அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தனர்..[6][7]ஜாபர் எக்ஸ்பிரஸ் இரயில் கடத்தலுக்கு இந்தியா மூளையாகவும் மற்றும் ஆப்கானித்தான் கையும் இருக்கலாம் என பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டுகிறது. [8]
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads