சிமிழி ஊராட்சி
இது தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிமிழி ஊராட்சி (Simizhi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றிலிருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2344 ஆகும். இவர்களில் பெண்கள் 1161 பேரும் ஆண்கள் 1183 பேரும் உள்ளனர். இவ்வூரின் வரலாற்று பெயர் "சேழுசிபுரம்" என்பதாகும். இவ்வூரின் நடுவே "சோழசூடாமணி" ஆறு பாய்கிறது.
Remove ads
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]
Remove ads
அமைவிடம்
திருவாரூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருவாரூரிலிருந்து 14 கி.மீ.தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது.
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:
- கீழநாணச்சேரி
- பூங்காவூர்
- தலையாலங்காடு
குடவாசல் வட்டத்தில் உள்ள தலையாலங்காடு 53 சிமிழி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூராக, குடவாசலுக்கு கிழக்காக சுமார் 8.கி.மீ தொலைவில் குடவாசல்–திருவாரூர் நெடுஞ்சலையை ஒட்டியப்பகுதியில் சோழசுடமணியாற்றின் வடகரையில் அமையப்பெற்றுள்ளது. “தலையாலங்கானம்,” “ஆலங்கானம்” என்று மதுரைக் காஞ்சி, அகநானூறு, (அகம்-36-116-175-209) புறநானூறு(புறம்-371-372) போன்ற சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் ஊர் குடவாயிலை அடுத்த தேவாரம் பாடப்பெற்ற ஊரான தலையாலங்காடு என்று அறியமுடிகிறது.
ஆலங்கானம் சோழநாட்டு ஊராகக் கருதத்தக்கது என தமிழக வரலாற்றுக் குழுவினர் தம் நூலில் குறித்துள்ளனர். சேரன்,சோழன் மற்றும் வேளிர் ஐவரை பாண்டியன் நெடுஞ்செழியன் இவ்வூரில் வென்றான் என்பது வரலாறு. (தமிழ்நாட்டு வலராறு (1983) சங்க காலம் ப.253) இவ்வூரில் அப்பர் தேவாரப் பாடல்பெற்ற., சிவத்தலங்களுள் 93 வது தலமாக விளங்கும் கோயில் (நர்த்தனபுரீஸ்வரர்) உள்ளது. திருநாவுக்கரசர் தனது தேவாரப்பதிகங்ளில் இவ்வூரினை தலையாலங்காடு என்றே குறிப்பிட்டு பாடியுள்ளார் மேலும் இறைவனது பெயர் தலையாலங்காடன் என அறியமுடிகிது.
தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை ஆதிரைநா ளாதரித்த அம்மான் தன்னை முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற தண்டத்திற் றலையாலங் காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே. திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் ஆறாம் திருமுறை 6.079.1 |
இடைக்கால கல்வெட்டுகளில் இக்கோயில் இறைவன் பெயர் ஆடவல்லவீசுவரர். இறைவி பெயர் திருமடந்தையம்மை. என அறியமுடிகிறது. ஆடவல்லவீசுவரர் என்ற பெயரே சமஸ்கிருதமாக்கப்பெற்று நர்த்தனபுரீஸ்வர் என்று தற்போது வழங்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டின் வாயிலாக முதலாம் இராஜராஜனின் 6 வது ஆட்சி ஆண்டு அளிக்கப்பட்ட தேவ தானங்களும் அருமை உடையார் குமாரன் செண்டானாதர் உடையார் மகாமண்டபம் கட்டித்தந்த செய்தியும், அம்பர் அருவந்தை அரயன் சிவதவனப் பெருமானான காளிங்கராஜன் என்பவர் இக்கற்றளியைத் திருப்பணி செய்த தகவலையும் அறிய முடிகிறது. (இ.க.ஆ.அ175-1927-28)
Remove ads
பள்ளி
ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா உதவிபெறும் துவக்கப்பள்ளி.
அருகிலுள்ள கிராமங்கள்
அருகிலுள்ள நகரங்கள்
- திருவாரூர் - 14 கி.மீ
- குடவாசல் - 6 கி.மீ
- கும்பகோணம் - 25.கி.மீ.
- நன்னிலம்
- நாகப்பட்டிணம்
- மயிலாடுதுறை
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads