சிராவஸ்தி மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிராவஸ்தி மாவட்டம் (Shravasti District), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பிங்கா ஆகும். தேவி படான் கோட்டத்தில் உள்ள இம்மாவட்டம் நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
பகாராயிச் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாக துவக்கப்பட்ட சிராவஸ்தி மாவட்டம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து 175 கி மீ தொலைவில் இந்திய - நேபாள நாடுகளின் எல்லை ஓரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தைச் சுற்றி பகராயிச் மாவட்டம், பலராம்பூர் மாவட்டம், கோண்டா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது. சிராவஸ்தியில் ரப்தி ஆறு பாய்கிறது.
கி மு ஆறாம் நூற்றாண்டில் சிராவஸ்தி நகரம் கோசல நாட்டின் தலைநகராக விளங்கியது.
Remove ads
வரலாறு
கி மு ஆறாம் நூற்றாண்டில் சிராவஸ்தி நகரம் கோசல நாட்டின் தலைநகராக விளங்கியது. சாதுர்மாஸ்ய விரதத்தின் போது கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்தில் நான்கு மாதங்கள் சீடர்களுடன் தங்குவது வழக்கம்.
[1]
அசோகர் நிறுவிய ஸ்தூபிகள், பௌத்த விகாரைகள் சிராவஸ்தியில் உள்ளது. சமண சமய தீர்த்தங்கரர் சம்பவநாதர் சிராவஸ்தி நகரத்தில் பிறந்தவர் என்பதால், பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் பண்டைய சிராவஸ்தி நகரம் புனித தலமாக விளங்குகிறது.
வேத கால இச்வாகு குலத்தின் எட்டாவது மன்னர் சிராவஸ்து இந்நகரை நிறுவியதால் இந்நகரத்திற்கு சிராவஸ்தி எனப் பெயராயிற்று. கி மு ஐந்தாம் நூற்றாண்டில் சிராவஸ்தி நகரத்தின் மக்கட்தொகை 9,00,000-ஆக இருந்தது என்றும், இம்மக்கட்தொகை மகத நாட்டின் மக்கட்தொகையை விட கூடுதலாக இருந்தது எனவும் பண்டைய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


Remove ads
அமைவிடம்
சிராவஸ்தி மாவட்டம் தில்லி சுல்தானகம் மற்றும் மொகலாயப் பேரரசின் அவத் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. சிராவஸ்தி மாவட்டத்தின் தெற்கில் கோண்டா மாவட்டம்,மேற்கில் பகராயிச் மாவட்டம் கிழக்கில் பலராம்பூர் மாவட்டம், வடக்கில் நேபாளம் எல்லைகளாக கொண்டது.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,114,615 ஆக உள்ளது. மக்கள் தொகையில் 594,318 ஆண்களும் மற்றும் 520,297 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 875 பெண்கள் வீதம் உள்ளனர். 1,948 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 49.13% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 59.55% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 37.07%% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆக உள்ளது. [2]
மொழிகள்
உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் அவதி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
Remove ads
பொருளாதாரம்
2006-ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இந்தியாவின் 250 மாவட்டங்களில் சிராவஸ்தி மாவட்டமும் ஒன்றாக இந்திய அரசு அறிவித்துள்ளதால், இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 34 மாவட்டங்களில் சிராவஸ்தி மாவட்டமும் ஒன்றாகும்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads