சிரில்லிக் எழுத்துக்கள்

From Wikipedia, the free encyclopedia

சிரில்லிக் எழுத்துக்கள்
Remove ads

சிரில்லிக் எழுத்துகள் (Cyrillic script, /sᵻrɪlɪk/) என்பது கிழக்கு ஐரோப்பாவடக்கு ஆசியா, நடு ஆசியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் எழுத்து முறை ஆகும்.  இது  முதன்முதலாகப் பல்கேரிய பேரரசிலுள்ள பிரெஸ்லவ் (Preslav) இலக்கியப் பள்ளியில், கி. மு.9 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆரம்பகால சிரிலிக் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.[2][3][4]  தெற்காசியா ஐரோப்பா, வடக்கு ஐரோவாசியா, மற்றும் சிலாவியா அல்லாத மொழிகள் பயன்படுத்தப்படும் அனைத்து நாடுகளிலும், தொன்றுதொட்டு, சிரில்லிக் அகரவரிசை எழுத்துகளே அடிப்படையாக உள்ளன. 2011ல், யூரோசியாவில் சுமார் 252 மில்லியன் மக்கள் சிரில்லிக் எழுத்துக்களைத் தங்கள் தேசத்தின் அதிகாரப்பூர்வ மொழியின் எழுத்துகளாகப் பயன்படுத்துகின்றனர். உருசியாவில்பாதிக்கு மேலானோர் சிரில்லிக் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.[5]  2007ஆம் ஆண்டு, சனவரி 1ல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பல்கேரியாவை இணைத்த பின், இலத்தீன் எழுத்துகள் மற்றும் கிரேக்க எழுத்துகளைத் தொடர்ந்து, சிரில்லிக் எழுத்துமுறை, ஐரோப்பிய ஒன்றியத்தின்
மூன்றாவது அதிகாரபூர்வமான எழுத்து முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[6]

விரைவான உண்மைகள் சிரில்லிக் எழுத்துகள், எழுத்து முறை வகை ...

கிரேக்க மொழியின் தொடர்பிலா எழுத்து வடிவங்களிலிருந்து சிரிலிக் எழுத்துகள் பெறப்பட்டன. பழைய கிலாகோலிதிக் (Glagolitic) எழுத்துகளால், எழுத்துகளின் எண்ணிக்கை  அதிகரித்திருக்கிறது. இந்தக் கூடுதல் எழுத்துகள் மற்றும் பண்டைய மசிதோனிய மொழி உச்சரிப்புகள், கிரேக்கத்தில் காணப்படவில்லை.  பைசாந்தியப் பேரரசின் இரண்டு புனிதச் சகோதரர்கள், சிரில் (Cyril) மற்றும் மெத்தோடியஸ் (Methodius) ஆகியோரின் நினைவாக இந்த எழுத்துமுறை சிரிலிக் எழுத்துமுறை என்று பெயரிடப்பட்டுள்ளது.[7]  இந்த புனிதச் சகோதரர்கள், கிலாகோலிதிக் எழுத்துக்களை உருவாக்கியவர்கள்.  சிரில் மற்றும் மெத்தோடியஸின் ஆரம்பகால சீடர்களால் சிரிலிக் உருவாக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டதாக நவீன அறிஞர்கள் நம்புகின்றனர்.

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரஷ்யாவில் சிரிலிக் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன. அப்பொழுது, மேற்கு ஐரோப்பாவில் உள்ள தனது தூதரகத்திலிருந்து திரும்பிய உருசியாவின் முதலாம் பேதுரு சிரிலிக் எழுத்துகளில் அதிக அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.  புதிய எழுத்துகள், லத்தீன் எழுத்துகளை ஒத்திருந்தன. பல பழைய வழக்கொழிந்த எழுத்துகள் நீக்கப்பட்டன. பல எழுத்துகள் தனிப்பட்ட முறையில் பேதுருவால் சேர்க்கப்பட்டன. உதாரணம்: Я லத்தீன் மொழியின் ஆர் (R) மூலம் பதிலியிடப்பட்டது.  மேற்கு ஐரோப்பிய அச்சுக்கலைப் பண்பாட்டு முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.[8]

Remove ads

எழுத்துகள்

சிரிலிக் எழுத்துகள் கிழக்கு மற்றும் தெற்கு ஸ்லாவிக் பிரதேசங்கள் முழுவதும் பரவின. பண்டைய ஸ்லேவிக் எழுத்துகள் போன்று உள்ளூர் மொழிகளில் எழுதுவதற்கு இது ஏற்புடையதாக இருந்தது. 

ஆரம்ப கால சிரிலிக் எழுத்துகள்[9][10]
А Б В Г Д Е Ж Ѕ[11] И І К Л М Н О П Р С Т ОУ[12] Ф
Х Ѡ Ц Ч Ш Щ Ъ ЪІ[13] Ь Ѣ Ѥ Ю Ѫ Ѭ Ѧ Ѩ Ѯ Ѱ Ѳ Ѵ Ҁ[14]

பழைய கையெழுத்துப் பிரதிகளில்,  தலைப்பெழுத்துக்களுக்கும், சிற்றெழுத்துகளுக்கும், இடையே எவ்வித மாற்றமும் இல்லை.

Thumb
மெலெஷியஸ் ஸ்மோட்ரிட்ஸ்கியின் (Meletius Smotrytsky) ஸ்லாவோனிக் கிறித்தவர்களின் வழிபாட்டிட நெறிமுறை நூலிலிருந்து ஒரு பக்கம் (1619)

ஏரி (Yeri) (Û) முதலில் யர் மற்றும் ஐ (I) (Ъ + І = Û) என்றும், ஒரு கட்டுப் பொருளாக இருந்தன. எழுத்துகள் மூலம் உருவாக்கப்பட்ட ஒலிப்புக்குறிகள் மேற்கோள் காட்டப்பட்டன.

  • Ꙗ ஸ்லாவோனிக் எழுத்து (நவீன யே (Ya)யின் முன்னோடி);
  • Я, (இது Ѧயிலிருந்து பெறப்பட்டது);
  • Ѥ, Ю (І மற்றும் ОУ யின் கட்டுப் பொருள் Ѩ, Ѭ.);
  • சில நேரங்களில் வெவ்வேறு எழுத்துகள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டன: உதாரணம்:  И = І = Ї, (அச்சுக்கலை வகைகள்)
  • அது போல், О = Ѻ.
  • பொதுவாகப் பயன்படுத்தப்படும் கட்டுப் பொருள் ѠТ = Ѿ.

 சிரிலிக் எழுத்துகள், எண் மதிப்புகளைக் கொண்டிருந்தன. இவை சிரிலிக் அகரவரிசையில் இல்லை. ஆனால், இந்த எழுத்துகள் கிரேக்க மரபுரிமை எழுத்துக்களுடன் தொடர்பு கொண்டிருந்தன.

 சிரிலிக் எண்கள்
1 2 3 4 5 6 7 8 9
А В Г Д Є Ѕ З И Ѳ
10 20 30 40 50 60 70 80 90
І К Л М Н Ѯ Ѻ П Ч (Ҁ)
100 200 300 400 500 600 700 800 900
Р С Т Ѵ Ф Х Ѱ Ѿ Ц

ஆரம்ப கால சிரிலிக் எழுத்துகளைக் கணினிகள் மூலம் வெளிப்படுத்துவது கடினமக இருந்தது. பல முற்கால சிரிலிக் எழுத்துகள், நவீன சிரிலிக் வடிவங்களிலிருந்து வேறுபடுகின்றன. கையெழுத்துப் பிரதிகள், அச்சு வகை சிரிலிக் எழுத்து வடிவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளன. மேலும் காலப்போக்கில் மாற்றங்கள் அதிகரித்துள்ளன. சில எழுத்துருக்கள் எழுத்துக்களை அச்சேற்றப் போதுமான அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகடுகள் உருவாக்க போதுமானதாக இருந்தன. இது அனைத்து எழுத்துருக்களுக்கும் பொருந்தாததால், ஒருங்குறி முறை உட்படுத்தப்பட்டது. எழுத்து வடிவ வேறுபாடுகள் அல்லது கையெழுத்து ஆதாரங்களில் காணப்படும் மாற்றங்களை ஒருங்குறி தரம் ஏற்றுக்கொள்வதில்லை. இது இரண்டையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயலியாக உள்ளது.

கணினிவழி ஒருங்குறி 5.1 தரநிலை, 4 ஏப்ரல் 2008 அன்று வெளியிடப்பட்டது. இச்செயலி மூலம், ஆரம்ப கால சிரிலிக் மற்றும் நவீன திருச்சபை ஸ்லாவோனிக் மொழிகளை கணினியில் அச்சேற்ற முடிகிறது. மைக்ரோசாப்ட் விண்டோஸின் (Microsoft Windows), செகோ யூஐ (Segoe UI) பயனர் இடைமுக எழுத்துருவானது, விண்டோஸ் 8ல் பழங்கால சிரிலிக் எழுத்துக்களை அச்சேற்றப் போதுமான உள்ளது.

Remove ads

அச்சுக்கலை மற்றும் எழுத்து வடிவங்கள்

சிரிலிக் அச்சுக்கலையின் வளர்ச்சி மேற்கு ஐரோப்பாவில் ஒரு மறுமலர்ச்சி கட்டம் ஆகும். இது நடுக்காலம் முதல் பரோக் வரை நீடித்தது. லத்தீன் மொழிகளில் இருந்து சில சிரிலிக் கணினி எழுத்து வகைப்பாடுகளின் உருவாக்கம் சிறப்பாக நிறைவேரியது. இந்த, சிரிலிக் எழுத்துவகைகளின் செயலாக்கம், எழுத்துகளை இலத்தினியமாக்கலுக்கு வழிவகுத்தது.

Thumb
எழுட்துக்கள் ஜி(Ge), டி(De), ஐ(I),  ஐ க்ரட்கோயே(I kratkoye), எம்(Em), டெ(Te), ட்செ(Tse), பி(Be) மற்றும் வி(Ve) நேராக மேல் வரிசையில் உள்ளவை (அச்சிடப்பட்டவை) மற்றும்  எளிதாக ஓடும் போக்குடைய எழுத்து வகை  (கையெழுத்து) வகைகள் மேலே உள்ளது: ஜோர்ஜியா எழுத்துரு கீழே உள்ளது: ஒடெஸ்ஸா எழுத்துரு

சிரிலிக் பெரிய மற்றும் சிறிய எழுத்து வடிவங்கள் லத்தீன் அச்செழுத்துக்கள் போன்றவை அல்ல. நல்ல தரமான சிரிலிக் தட்டச்சுமுகத்தில் தனித்தனி சிறிய மற்றும் தலைப்பு எழுத்துகள் உள்ளது சிறப்பாகும்.[15]

Thumb
மேல் பகுதி: குறிப்பிட்ட ரஷ்ய எழுத்து வடிவங்கள், இடைப்பகுதி: முறையான செர்பியன்-மாஸிடோனியன் எழுத்து வடிவங்கள் கீழ்ப் பகுதி: பல்கேரிய எழுத்து வடிவங்கள்

ஸ்லாவிக் மொழிகளில் இயல்பாக உள்ள பெரும்பாலான எழுத்துருக்கள் மற்றும் சொற்கள் "ரோமன்" மற்றும் "இத்தாலிக்" வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை.[16] அதற்குப் பதிலாக, பெயர்ச்சொற்கள், பின்வரும் ஜெர்மன் பெயரிடும் வடிவங்களைக் கொண்டுள்ளன. தரப்படுத்தப்பட்ட சேர்பியா மொழியிலும், மாசிடோனியா[17] மொழியிலும், பயன்படுத்தப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துகள், எளிதாகக் கையெழுத்து ஓடும் போக்குடைய எழுத்துகள் மற்றும் சங்கேத எழுத்துகள் போன்றவை, மற்ற மொழி எழுத்துகளிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. இந்த எழுத்து வடிவங்கள், குறிப்பாக விளம்பரங்கள், சாலையோர பதாகை அறிகுறிகள், கல்வெட்டுகள், சுவரொட்டிகள், பத்திரிகைகள் அல்லது புத்தகங்கள் போன்றவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

பின்வரும் அட்டவணையில், நேர் வடிவ மற்றும் சரிந்த வடிவ ரஷ்ய எழுத்துகளுக்கும் சிரிலிக் எழுத்துகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் காட்டப்பட்டுள்ளன. சரிந்த வடிவங்கள் அவற்றின் நேர் வடிவத்திலிருந்து கொண்டுள்ள வேறுபாடுகள், லத்தீன் எழுத்து வழிப் பயனர்களுக்கு குழப்பத்தைத் தருகின்றன.

வரைவடிவத்திற்கு அருகில் உள்ள இணைப்பில் கிளிக் செய்யவும் graphical image.
а б в г д е ё ж з и й к л м н о п р с т у ф х ц ч ш щ ъ ы ь э ю я
а б в г д е ё ж з и й к л м н о п р с т у ф х ц ч ш щ ъ ы ь э ю я
Remove ads

கணினி குறியாக்கம்

ஒருங்குறி

முதன்மைக் கட்டுரை: ஒருங்குறியில் சிரிலிக் எழுத்துகள் ஒருங்குறி பதிப்பு 10.0 ஐப் பொறுத்தவரை, தேசிய எழுத்துகள் மற்றும் வரலாற்று எழுத்துகள் உள்ளிட்ட அனைத்து சிரில்லிக் எழுத்துக்களும் பல தொகுதிகளாகக் குறியிடப்பட்டுள்ளன:

  • சிரில்லிக்: U+0400–U+04FF
  • சிரில்லிக் துணைப்பதிப்பு: U+0500–U+052F
  • சிரில்லிக்  நீட்டித்த வடிவம் - ஏ(A): U+2DE0–U+2DFF
  • சிரில்லிக் நீட்டித்த வடிவம் - பி(B): U+A640–U+A69F
  • சிரில்லிக் நீட்டித்த வடிவம் - சி(C): U+1C80–U+1C8F
  • ஒலிப்புமுறை நீட்டித்த வடிவங்கள்: U+1D2B, U+1D78
  • அரை மதிப்புகளை இணைத்தல்: U+FE2E–U+FE2F

U + 045F க்கும், U + 0400 க்கும், இடையில் உள்ள எழுத்துகள், ஐ.எஸ்.ஓ./ ஐ.ஈ.சி.(ISO/IEC) 8859-5 தரக்குறியீட்டின் அடிப்படையில் 864 நிலைகள் மேலே நகர்த்தப்பட்டுள்ளன. U + 0460 லிருந்து, U + 0489 வரை உள்ள எழுத்துகள் இப்போது பயன்பாட்டில் இல்லாத வரலாற்று எழுத்துகள் ஆகும். U + 052F லிருந்து, U + 048A வரை உள்ள எழுத்துகள் சிரிலிக் எழுத்துக்களுடன், பல்வேறு மொழிகளுக்காக எழுதப்பட்ட கூடுதல் எழுத்துகள் ஆகும். ஒருங்குறி பொது விதிப்படி, உச்சரிக்கப்படாத சிரிலிக் எழுத்துகள் சேர்க்கப்படவில்லை.

Thumb
உலகம் முழுவதும் சிரிலிக் எழுத்துகளின்ன் பரவல்.
  சிரிலிக் எழுத்துகள் மட்டுமே அதிகாரப்பூர்வமானவை
  மற்ற எழுத்துக்களுடன் சிரிலிக் எழுத்துகள் இணை அதிகாரத்தன்மை பெற்றுள்ளன. இது மால்டோவா (Moldova) மற்றும் ஜோர்ஜியாவின் (Georgia) வரம்படுக்குப் பகுதிகளில், புழக்கத்தில் உள்ள மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத மொழியாக உள்ளது.
  சிரிலிக் எழுத்துகள் அதிகாரப்பூர்வமாக இல்லை. ஆனால் மரபுவழி எழுத்துக்களாகப் பொதுவான பயன்பாட்டில் உள்ளன.
  சிரிலிக் எழுத்துகள் பயன்படுத்தப்படவில்லை
Thumb
எளிதாக கையெழுத்து ஓடும் போக்குடைய சிரில்லிக் எழுத்துகள்

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads