சிலந்திபிடிப்பான்

சிலந்திப்பிடிப்பான் சிற்றினம் From Wikipedia, the free encyclopedia

சிலந்திபிடிப்பான்
Remove ads

சிலந்திபிடிப்பான்[2] (Little spiderhunter) (அரக்னோதீரா லாங்கிரோசுடுரா)] நெக்டாரினிடே குடும்பத்தைச் சேர்ந்த நீண்ட, வளைந்த அலகினையுடைய ஒரு குருவி சிற்றினம் ஆகும். நியமிக்கப்பட்ட இனமான A. longirostra longirostra-வைத் தவிர எட்டு உள்ளினங்கள்[3] உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

விரைவான உண்மைகள் சிலந்திபிடிப்பான், காப்பு நிலை ...
Remove ads

உடலமைப்பும் கள அடையாளங்களும்

உடலமைப்பு

லோட்டன் தேன்சிட்டை விட அளவில் [13 cm - 16 cm] பெரியது. மிக நீளமான, கீழ்நோக்கி வளைந்த அலகு; இடலைப் பச்சை நிற, கோடுகளற்ற மேற்பாகம். மஞ்சள் நிற கீழ்ப்பாகம். கண்-அலகு இடைப்பகுதி வெண்ணிறம். பறக்க உதவும் கரும்பழுப்பு இறகுகள் பச்சை ஓரங்களுடன் காணப்படும். வால் கரும்பழுப்பு நிறம்; அதன் ஓரங்கள் பச்சை நிறத்திலும் முனை வெண்மை தோய்ந்தும் இருக்கும். வாலின் அடிப்பகுதி வெள்ளை, கால்கள் கருப்பு அல்லது கருஞ்சாம்பல் நிறம்[3].

கள அடையாளங்கள்

தேன்சிட்டுகளுக்குரிய பொதுவான இயல்பான ஆண் பெண் வேற்றுமை இவற்றுள் இல்லை; ஆனால் ஆணை விட பெண் சற்று சிறியதாக இருக்கும். பெண் குருவியின் தொண்டைப் பகுதி அதிக வெண்மையுடன் காணப்படும்; தோள்பட்டையில் ஆணுக்கு உள்ள செம்மஞ்சள் நிறக்கொத்து பெண்ணிற்கு இருக்காது[3].

Remove ads

பரவலும் வாழ்விடமும்

பரவல்

இப்புள்ளினமும் அதன் பல்வேறு உள்ளினங்களும் இந்தியா, வங்கதேசம், பூட்டான், மியான்மர், லாவோசு, வியட்நாம், கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சில தீவுகளிலும் காணப்படுகின்றன[4]. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்கு கோதாவரிப் பகுதியிலுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படுகின்றது[4].

வாழ்விடம்

அலையாத்திக் காடுகள், சோலைக்காடுகள், மரங்கள் வெட்டப்பட்ட காட்டுப் பகுதிகள், காடுகளின் எல்லைப் பகுதிகள், ஊர்ப்புறத் தோட்டங்கள், வயல்வெளிகள், இரப்பர், இஞ்சி, வாழைத் தோப்புகளில் இவற்றைக் காணலாம். பொதுவாக, 600 மீ உயரம் வரை காணப்படும். தென்னிந்தியாவில் 1500 மீ வரையிலும் இவை காணப்படுகின்றன[5].

Remove ads

உணவு

தேன், சிலந்திகள், பூச்சிகள்.

வாழை (Musa sp), கல்வாழை (Canna sp.), முள் முருங்கை (Erythrina sp.) உள்ளிட்ட தாவரங்களின் பூக்களை இவை நாடும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads