நால்வர் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நால்வர் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், குமாரி தங்கம், என். என். கண்ணப்பா, எம். என். கிருஷ்ணன், டி. பி. முத்துலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். முக்கிய நாயகனாக நடித்த நாகராஜன் படத்தின் எழுத்தாளராகவும் இருந்தார்.[1] நான்கு உடன்பிறப்புகளைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சுற்றிப் படம் நகர்கிறது.
Remove ads
கதை
கதைப்படி ஆலையில் பணியாற்றும் தந்தைக்கு நான்கு மகன்கள். மூத்தமகன் நேர்மையாக காவல்துறை அதிகாரி (ஏ. பி. நாகராஜன்) இரண்டாவது மகன் வழக்கறிஞர், மூன்றாவது மகன் அவர்களது தந்தை பணிபுரியும் அதே ஆலையில் மேற்பார்வையாளர் (எம். என். கிருஷ்ணன்), கடைக்குட்டி ஒரு சமூக ஆர்வலர். ஒரு கட்டத்தில் தந்தை மீது ஒரு புகார் வருகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியான மகன் என்ற செய்கிறார் என்பதே கதை.
நடிகர்கள்
- ஏ. பி. நாகராசன்
- குமாரி தங்கம்
- என். என். கண்ணப்பா
- எஸ். ஆர். ஜானகி
- டி. பி. முத்துலட்சுமி
- எம். என். கிருஷ்ணன்
- வி. என். நடேசன்
- ஆர். பாலசுப்பிரமணியம்
- சி. ஆர். விஜயகுமாரி
- வி. எம். ஏழுமலை
- ஈ. ஆர். சகாதேவன்
- எஸ். எஸ். மஜீது
- இரத்தினக்குமாரி
- என். எஸ். நாராயணப்பிள்ளை
- ஏ. ஆர். தாமோதரன்
- வி. கே. சுவாமிநாதன்
- வி. ஆர். நடராஜன்
- டி. வி. சத்தியமூர்த்தி
- கௌதமதாஸ்
- கே. என். கனகசபை
- நடனம்
- குமாரி கமலா
- ரீட்டா
- சுலோச்சசனா
தயாரிப்பு
ஏ. பி. நாகராஜன் நாடக் துறையில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர். அவர் தனது பழனி கதிரவன் நாடக சபா மூலம் நால்வர் என்ற நாடகத்தை நடத்தினார். இந்த நாடகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதைத் திரைப்படமாக்க ஆக்க தயாரிப்பாளர் எம். ஏ. வேணு முன்வந்தார். படத்திற்காக கதையில் சிற்சில மாற்றங்களைச் செய்து திரைக்கதை எழுதி நாயகர்களில் ஒருவராகவும் ஏ. பி. நாகராஜன் அறிமுகமானார்.[2] இப்படம் கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. சங்கீதா பிக்சர்ஸ் பதாகையில் எம். ஏ. வேணு தயாரித்தார். வி. கிருஷ்ணன் இயக்கினார்.[3] இரண்டு தசாப்தங்களுக்குள் தமிழ் திரையுலகில் தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், கந்தன் கருணை, திருமால் பெருமை போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி நாகராஜன் ஒரு வெற்றிகரமான திரைப்படப் படைப்பாளியாக ஆனார். இந்தப் படங்கள் தமிழ்நாட்டில் ஒரு வழிபாட்டு அந்தஸ்தைப் பெற்றன.[3] சி. ஆர். விஜயகுமாரி, பின்னாளில் தமிழ்த் திரைப்படங்களில் ஒரு பிரபலமான நடிகையாகத் திகழ்ந்தார், இப்படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.[1]
இசை
இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். பாடல் வரிகளை அ. மருதகாசி, தஞ்சை இராமையாதாஸ், கா. மு. ஷெரீப் ஆகியோர் எழுதினர். நாகராஜனும் இசையமைப்பாளருடன் இணைந்து படத்தில் ஒரு பாடலுக்கு குரல் கொடுத்தார். பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர்கள் என். எல். கானசரஸ்வதி, யு. ஆர். சந்திரா, ஏ. ஜி. ரத்னமாலா, ஜி. பொன்னம்மாள், எம். எல். வசந்தகுமாரி, கே. ராணி, திருச்சி லோகநாதன்.[4]
"மயிலே மால் மருகன்" பாடல் படத்தில் இடம் பெறவில்லை.[5]
Remove ads
வெளியீடும் வரவேற்ப்பும்
நால்வர் 5 நவம்பர் 1953 இல் வெளியிடப்பட்டது.[6] இப்படம் நல்ல வசூல் ஈட்டி வெற்றியைப் பெற்றது. இதன் பிறகு நாகராஜன் "நால்வர் நாகராஜன்" என்று அழைக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads