செந்தாரப்பட்டி

இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

செந்தாரப்பட்டி (Sentharapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பச்சை மலை அடிவாரத்தில் அமைந்த ஒரு இயற்கை வளமுள்ள பகுதி. இப்பகுதியின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

இப்பேரூராட்சி, சேலத்திலிருந்து 70 கி.மீ.; கங்கவள்ளியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 35 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது.[4] இதன் மேற்கே தம்மம்பட்டி 4 கீ.மீ.; வடக்கே கங்கவள்ளி 20 கீ.மீ.; தெற்கே துறையூர் 40 கீ.மீ.தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

செந்தாரப்பட்டி - அஞ்சல் குறியீட்டு எண் 636110 ஆகும். இப்பேரூராட்சி கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி (மக்களவைத் தொகுதி) க்குட்பட்டதாகும்.

மக்கள் தொகை பரப்பில்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி 3,894 குடும்பங்களும், 43 தெருக்களையும், 14,308 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 71.30% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1025 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

போக்குவரத்து

செந்தாரப்பட்டி - ஆத்தூர், சேலம், தம்மம்பட்டி, கங்கவல்லி, திருச்சி, நாமக்கல், சின்னசேலம், விழுப்புரம், மதுரை, இராசிபுரம், ஈரோடு, திருச்செங்கோடு, வாழப்பாடி, கோவை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், உப்பிலியாபுரம், துறையூர், சமயபுரம், சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு, பச்சைமலை மற்றும் கொல்லிமலை போன்ற நகரங்களுக்கு சாலை வழியாக பேருந்து போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, உள்கிராமங்களை இணைப்பதில் மினிபஸ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் அருகிலுள்ள ரயில் நிலையம் 32 கி.மீ தொலைவில் உள்ள ஆத்தூரில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் அருகிலுள்ள விமான நிலையம் சேலம் விமான நிலையம், 70 கி.மீ தொலைவில் உள்நாட்டு சேவைகளை வழங்குகிறது. இரண்டாவது அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆகும், இது நகரத்திலிருந்து சுமார் 98 கி.மீ தொலைவில் உள்ளது.

Remove ads

செந்தாரப்பட்டியில் உள்ள பகுதிகளின் பட்டியல்

  • அம்பேத் நகர்
  • ஏடிசி நகர்
  • பஜனைமடம்
  • காந்தி நகர்
  • காமராஜர் நகர்
  • கிழக்கு சத்திரம்
  • கொலிஞ்சி பட்டி
  • கொண்டையம்பள்ளி கிராஸ்ரோட்
  • மாதா கோவில் நகர்
  • முல்லை நகர்
  • முருகன் நகர்
  • நேதாஜி நகர்
  • புதிய காலனி
  • பழைய காலனி
  • புதுக்கடை
  • சந்தைப்பேட்டை
  • தாழையாறு
  • தெற்கு சத்திரம்
  • வாணி கிணறு

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads