செந்நீல செம்பகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வயலசியசு செம்பகம் (Violaceous coucal) அல்லது செந்நீல செம்பகம் (சென்ட்ரோபசு வயலேசியசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினமாகும். இது பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் (பப்புவா நியூ கினியா) காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.
Remove ads
விளக்கம்
சிவப்புக் கண்ணைச் சுற்றி வெளிறிய தோலுடன், உடல் முழுக்க முழுக்க அடர் நீலம் கலந்த கருப்பு நிறமுடையது. பெரிய, நீண்ட வால் கொண்ட, தடிமனான பறவை. பிசுமார்க் தீவுகூட்டத்தில் பெரும்பாலான வாழ்விடங்களில் காணப்படும். பொதுவாக பழைய-வளர்ந்த தாழ் நில காடுகளில் வாழ்கின்றன. தோற்றத்தில் பசிபிக் செம்பகம் போன்றது. ஆனால் அளவில், குறிப்பிடத்தக்க வகையில் பெரியது. தந்தத்தின் நிறத்தில் உள்ள அலகிற்கு பதிலாக அடர் சாம்பல் நிறம் கொண்டது.[2]
இது பெரிய வாழிட வரம்பு மற்றும் எண்ணிக்கையினை கொண்டுள்ளதால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads