கருஞ்செம்பகம்

From Wikipedia, the free encyclopedia

கருஞ்செம்பகம்
Remove ads

கருஞ்செம்பகம் (Black coucal-சென்ட்ரோபசு கிரில்லி) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம் ஆகும். இது சகாராவின் தெற்கே ஆப்பிரிக்காவில் பரவலான காணப்படுகின்றது.

விரைவான உண்மைகள் கருஞ்செம்பகம், காப்பு நிலை ...
Remove ads

விளக்கம்

கருஞ்செம்பகத்தில் ஆண் 30 cm (12 அங்) நீளமும், பெண் செம்பகம் வயது 34 cm (13 அங்). இவை தோற்றத்தில் ஒரே மாதிரியாக உள்ளது.[2] இனப்பெருக்க காலத்தில் தலை, உடல் வால் பகுதியில் உள்ள இறகுகள் கருப்பு நிறமாக இருக்கும். அலகு மற்றும் கால்கள் கருப்பு நிறமாக இருக்கும். இளம் பறவைகளில் அடர் மற்றும் ஒளிரும் கோடுகளும் பட்டைகளும் உள்ளன.[3]

பரவலும் வாழிடமும்

கருஞ்செம்பகம் அங்கோலா, பெனின், போட்ஸ்வானா, புர்கினா பாசோ, புருண்டி, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ குடியரசு, டி.ஆர்.சி., ஐவரி கோஸ்ட், ஈஸ்வதினி, எத்தியோப்பியா, காபோன், காம்பியா, கானா, கினியா, கினியா, கினியாவ், லைபீரியா, மலாவி, மாலி, மொசாம்பிக், நமீபியா, நைஜர், நைஜீரியா, ருவாண்டா, செனகல், சியரா லியோன், தென்னாப்பிரிக்கா, சூடான், தான்சானியா, டோகோ, உகாண்டா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1] இது சில இடங்களில் நிலையாக வசிப்பதாகவும், சில இடங்களில் புலம்பெயர்ந்தவையாகவும் உள்ளது. இதன் வாழ்விடம் சதுப்புநிலங்கள், சவன்னா, புல்வெளி, காட்டுப் புதரிலும், அடிமரங்கள், மற்றும் வனப்பகுதிகளில் வெட்டப்பட்ட மரங்கள் நிறைந்த பகுதிகள், எப்போதாவது நாணல் மற்றும் பாபிரஸ் ஆகும். இது பொதுவாக 1,500 m (5,000 அடி) க்கு கீழ்ப்பகுதிகளில் காணப்படும். ஆனால் எப்போதாவது 2,000 m (6,600 அடி) வரை செல்லலாம்.[2]

Remove ads

சூழலியல்

கருஞ்செம்பகத்தில் ஆண்கள் கூட்டினை பாதுகாக்கும் பணியினையும், அதே நேரத்தில் பெண்கள் பலதார உறவினையும் கொண்டுள்ளது. பெண்களின் ஆக்ரோசத் தன்மையினை புரோஜெஸ்ட்டிரோன் கட்டுப்படுத்துகின்றது என ஆய்வுகள் காட்டுகின்றன.[4]

நிலை

கருஞ்செம்பகம் மிகவும் பரந்த வரம்பைக் கொண்டுள்ளது. இதனுடைய வாழ்வில் குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனுடைய எண்ணிக்கைச் சீராக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதன் பாதுகாப்பு நிலையை "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்" என்று மதிப்பிட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads